ராஜ்கிரன் அந்த காலத்துல பொத்தேரின்னு பெரிய கபடி வீரர். அவருக்கு இப்போ 70 வயசாகுது. ரெண்டு பொண்டாட்டி காரரான அவரு சொத்த தாரபாகமாக பிரித்து கொடுத்ததில் குடும்பம் ரெண்டா பிரிஞ்சு கிடக்குது. அதுல இரண்டாவது சம்சாரத்து வழி வாரிசுதான் அதர்வா. உள்ளூர் வில்லன் ரவிகளே ராஜ்கிரண் பேரை கெடுக்க சில சித்து விளையாட்டுகளை செய்ய குடும்ப மானம் குலைந்து போகிறது. அதனை பேரன் அதர்வா எப்படி சரி பண்றார் என்பதுதான் படம்.
அரைத்து புளித்து போன கதை மாவில் கொஞ்சம் கபடி மசாலாவை பொட்டு மசாலா தோசை சுட்டிருக்கிறார் இயக்குனர் சந்தானம். கூட்டு குடும்பம், அதில் பங்காளி சண்டை. பேரன் குடுபம்த்தை சேர்த்து வைப்பது போதும்டா சாமி வேற மாதிரிய கதை யோசிங்கப்பா.
ராஜ்கிரண் பாவம் அவரால வேகமாக நடக்க கூட முடியல அவரப்போயி கபடியெல்லாம் ஆட வச்சிருக்காங்க. முதியோர் பாதுகாப்பு சட்டத்துல எல்லாரையும் உள்ள புடிச்சி போட்டாலும் தப்பில்லை. அதர்வா வழக்கம்போல துள்ளுறார்.
களவானி, வாகை சூடவான்னு அழகான படம் தந்த சற்குணம் ஏன் இப்படி வீணாப்போனார்னு தெரியல.