நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும்

158

ஆர்.மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படமாகும். இப்படம் இன்னும் பல மும்மொழி திரைப்படங்களுக்கு வழிவகுக்கவுள்ளது.

ஆர். மாதவன் மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுப் பின், இந்த தெலுங்கு சஸ்பென்ஸ் த்ரில்லர், பார்க்க வேண்டிய ஒரு படம் என்று நிச்சயமாக சொல்லலாம். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் திரைப்படம் நிசப்தம். இது பல பெரிய மும்மொழி திரைப்படங்களுக்கான கதவை திறக்கவுள்ளதால் அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தயாரிப்பு நிறுவனத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் இது பற்றி கூறும்போது, ‘படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்த பெரும் வரவேற்பால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படம் பார்க்கும் முறை மாறிவிட்டது. மேலும் பிராந்திய பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக, நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் முதல் மும்மொழி திரைப்படம் நிசப்தம். இது நாட்டின் தொலைதூர நகரங்களில் உள்ள ஒவ்வொரு நபரையும் வளர்ச்சியடைந்ததாக உணரவைக்கும் என்று தயாரிப்பாளர்கள் கருதுகின்றனர். மேலும் இதை பிரதான சினிமா தளங்களின் ஒரு பகுதியாகவும் அவர்கள் பார்க்கிறார்கள். மிகப்பெரிய வாய்ப்புகளுக்காகவும், வெளியீட்டுக்காகவும் நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்’ என்றனர்.

இந்தியா உள்ளிட்ட 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள ப்ரைம் சந்தாதாரர்கள் தெலுங்கு த்ரில்லரான நிசப்தம் (தமிழ் மற்றும் மலையாளத்தில் சைலன்ஸ் என்று தலைப்பிடப்பட்டுள்ளது) திரைப்படத்தை வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் காணலாம். ஹேமந்த் மதுகர் இயக்கத்தில், டிஜி விஷ்வா பிரசாத் தயாரித்துள்ள நிசப்தம் திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஆர். மாதவன் மற்றும் அஞ்சலி ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அமெரிக்க நடிகரான மைக்கேல் மேட்சென் முதல் முறையாக இந்திய படமொன்றில் அறிமுகமாகிறார். இவர்களோடு ஷாலினி பாண்டே, சுப்பராஜு, ஸ்ரீனிவாஸ் அவஸராலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் துணுக்குகளை பார்த்த பார்வையாளர்கள் படத்துக்காக காத்திருக்கின்றனர். இப்படத்தின் தெலுங்கு பதிப்பை ராணாவும், தமிழ் பதிப்பை விஜய் சேதுபதியும் வெளியிட்டனர். இந்த கொண்டாட்டமான திரைப்படத்தை தங்கள் திரைகளில் காண பார்வையாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்!