எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த குணசேகரன் யார் தெரியுமா இவர்தான்…

125

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த குணசேகரன் யார் தெரியுமா இவர்தான்…

மெகா சீரியல் எடுப்பதில் சன் டிவி எப்போதும் முதலிடத்தில் இருக்கும். சித்தி,அண்ணாமலை, மெட்டிஒலி, கோலங்கள் இந்த வரிசையில் இப்பொழுது எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாகவும் ரசிகர்களுக்கு இடையே ஆர்வமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது….

 எதிர்நீச்சல் சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. 6 முதல் 60 வரை இந்த இந்த சீரியலின் ரசிகர்கள் தான்.

அதுவும் ஆதி குலசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாரிமுத்து அவர்களின் நடிப்பும் , யதார்த்தமும் அதுவும் அவரு சொல்ற ” என்னம்மா ஏய் “அந்த டயலாக்கும் வசனமும் தான் இந்த எதிர்நீச்சல் சீரியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்றும் மக்களிடையே பெரிய ஆர்வமும் , எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம்….

 சில நாட்களுக்கு முன்பு அதில் ஆதிகுலசேகரனாக நடித்த மாரிமுத்து அவர்கள் இறப்பு அந்த சீரியலில் நடிப்பவர்கள் மட்டுமின்றி நாடகத்தை பார்க்கும் அனைவருக்கும் ஒரு பெரிய இழப்பாகவே இருந்தது…..

இருப்பினும் இந்த நாடகத்தில் அடுத்த ஆதி குலசேகரனாக யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுவடைந்தது…

 இந்நிலையில் நடிகர் வேலராம மூர்த்தி அவர்கள் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் வேலை பளு காரணமாக இதில் நடிக்கப் போவதில்லை என்று கூறிவிட்டார். தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் பசுபதியிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது…

 நடிகர் பசுபதி ஏற்கனவே நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.வில்லனாகவும் நடித்துள்ளார் ஆகவே பசுபதி இந்த கதாபாத்திரத்தில் ஆதி குலசேகரனாக வாழ்வார் என்று எதிர்பார்க்கலாம்….

அவருடைய தோரணை , உடல்வாகு , அவர் பார்வை இது அனைத்தும் ஆதிகுலசேகரனாகிய மாரிமுத்து ஓடு ஒத்துப் போகும்…..

 எனவே விரைவில் நம் பசுபதியை எதிர்நீச்சல் ஆதிகுலசேகரனாக பார்க்க நிறைய வாய்ப்பு உள்ளதாக சின்னத்திரை வட்டாரங்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்….