“கனெக்ட்” படத்தின் மூலம் தமிழ் படங்கள், தமிழ் ரசிகர்கள் இடையே கனெக்ட் ஆவதில் பெருமை கொள்ளும், பிரபல பாலிவு நடிகர் அனுபம் கெர் !

167

இந்திய திரைத்துறையில் மொழி மற்றும் பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சில நடிகர்களே பெரும்புகழ் பெற்றுள்ளனர். அந்தவகையில் தன் திரைத்துறை பயணத்தில் பல ஆண்டுகளாக, பாலிவுட் நடிகர் அனுபம் கெர் இந்த உயரிய அந்தஸ்தை தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கிறார். பல தளங்களில் வித்தியாசமான பாத்திரங்களால் பல தசாப்தங்களாக தலைமுறை தலைமுறையாக அனைத்து நடிகர்களாலும் போற்றப்படும் அரிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். உண்மையில், கோலிவுட்டில் உள்ள பல திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, அவரைத் தங்கள் திரைப்படங்களில் இடம்பெறச் செய்வது என்பது ஒரு கனவாக இருந்தது, அவர்களில் வெகு சிலர் அற்புதமான கதாபாத்திரங்களை தந்து, அவரைக் கவர்ந்து, தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் ‘கனெக்ட்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் மீண்டும் வந்திருக்கிறார் நடிகர் அனுபம் கெர். பாலிவுட்டின் பிரபல நடிகர் தனது தயாரிப்பில் பங்கு பெறுவதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். தனது கதாப்பாத்திரங்களை வெகு கவனமுடன் தேர்வு செய்து வரும் நடிகர் அனுபம் கெர், “கனெக்ட்” படத்தின் திரைக்கதையில் மிகவும் கவரப்பட்டு இப்படத்தில் பங்கேற்றிருக்கிறார்.

இயக்குநர் அஷ்வின் சரவணன் பெருமிதத்துடன் இது குறித்து கூறியதாவது…
“இந்தப் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தை அனுபம் கெர் ஏற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் அவரது திரைப்படங்களை பார்த்து வளர்ந்தோம், அவர் எங்கள் திரைப்படத்தில் இருப்பது உண்மையில் பெருமையாக இருக்கிறது. அவர் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் நட்புடன், இயல்பாக பழகினார். மிகவும் எளிமையுடன் அவரது பாத்திரம் பற்றி விவாதித்து அதை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு, ஒரு தமிழ் திரைப்படத்தில் இணைந்ததற்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், தமிழ்த் திரையுலகினரின் தரம் மற்றும் பணியின் மீதான அர்ப்பணிப்பை பாராட்டி மகிழ்ந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ்ப் படங்கள் குறித்த அவரது கருத்து மேலும் வலுவடையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் ” என்றார்.

இப்படத்திற்கு மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்கிறார், பிருத்வி சந்திரசேகர் இசையமைக்கிறார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பைக் கையாளுகிறார். கலை இயக்கத்தை ஸ்ரீராமன் & சிவசங்கர் செய்கின்றனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் M (Sync Cinema) ஆகியோர் ஒலி வடிவமைப்பு செய்கின்றனர். மேலும் தொழில்நுட்பக் குழுவில் ராஜகிருஷ்ணன் M.R. (ஒலி கலவை), “ரியல்” சதீஷ் (ஸ்டண்ட்), அனு வர்தன் & கவிதா J (ஆடை வடிவமைப்பு), சிதம்பரம் (மேக்கப்), சினேகா மனோஜ், அஸ்தா பிசானி (பிராஸ்தடிக் கலைஞர்), Realworks Studios(VFX), வர்ஷா வரதராஜன் (நடிகர் தேர்வு), கோமளம் ரஞ்சித் (ஸ்டில்ஸ்), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனர்), சுரேஷ் சந்திரா – ரேகா D One (மக்கள் தொடர்பு), ரா. சிபி மாரப்பன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), குபேந்திரன் VK (அசோஷியேட் புரடியூசர் ), மயில்வாகனன் KS (இணைத் தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.