Infiniti Film Ventures தயாரிப்பில், விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது !

141

நடிகர் விஜய் ஆண்டனி உடைய அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு, ரசிகர்களிடமட்டுமல்லாது, வணிக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. அவரது படங்களும், அதன் கதைகளங்களும் மக்களிடம் எளிதில் சென்று சேரும்படி மிக கவர்ச்சிகரமான படைப்புகளாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. அவரது மிக இயல்பான நடிப்பால், ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பெற்றிருக்கிறார். இதற்கெல்லாம் சமீபத்திய பேருதாரணமாக ” கோடியில் ஒருவன் ” திரைப்படம் அமைந்துள்ளது. மேலும், அவரது படங்கள் பெரும் லாபம் ஈட்டுவதால் மட்டும் தயாரிப்பாளர்களுக்கான நடிகராக ஆகவில்லை, அவரது ஒழுக்கம், நேரம் தவறாமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்க, படக்குழுவிற்கு பெரிதும் உதவும் அம்சமாக இருக்கிறது. மேலும், பல படங்களில், இடைவேளை இல்லாமல் தொடர்ந்து நடித்து கொண்டிருப்பதால், தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக மாறி இருக்கிறார். வணிக வட்டாரங்கள் 2022-ல் அவரது நடிப்பில் வெளியாக காத்திருக்கும் திரைப்படங்கள் மிகவும் லாபகரமாக அமையும் என உறுதியாக நம்புகின்றனர். இந்த தருணத்தில், விஜய் ஆண்டனியும், “தமிழ்படம்” புகழ் C.S.அமுதன் அவர்களும் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காலை (நவம்பர் 25, 2021) பூஜையுடன் துவங்கியது. இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு கலந்து கொண்டனர்.

இயக்குனர் சி.எஸ்.அமுதன் தனது ‘தமிழ்ப் படம்’ மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய வகை ஜானரை அறிமுகப்படுத்தினார். அதே போல் இந்த புதிய படத்தின் மூலம் வித்தியாசமான முறையில், பார்வையாளர்களை கவர்வார்.

Infiniti Film Ventures தயாரிப்பாளர்கள் கமல் போரா, G.தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் பல தயாரிப்பளார்களுக்கு முன்மாதிரியாக விளங்குகின்றனர். தயாரிப்பாளர்களின் பணி ஒரு படத்திற்கு நிதியளிப்பது மட்டுமல்ல, சரியாக வியாபாரம் செய்வதும் மற்றும் விளம்பரப் பணிகளுடன் திரைப்படத்தின் சுமூகமான வெளியீட்டை உறுதி செய்வதும் தான் என்பதை அவர்கள் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் ஒரு முன்னணி நட்சத்திர நடிகையை நடிக்க வைக்க, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

இன்னும் பெயரிடபடாத இந்த படத்தை Infiniti Film Ventures-யை சேர்ந்த தயாரிப்பாளர்கள் கமல் போரா, ஜி தனஞ்செயன், B. பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் தயாரிக்கின்றனர். ‘கோடியில் ஒருவன்’ வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் ” கொலை” மற்றும் ” மழை பிடிக்காத மனிதன் ” திரைப்படத்திற்கும் இவர்கள் தான் தயாரிப்பாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.