ரஜினி படத்திற்காக அவசரமாக ஐதராபாத் தனி விமானத்தில் வந்த நயன்தாரா

158

ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகை நயன்தாரா இன்று ஐதராபாத் சென்றுள்ளார். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ் ராஜ் என ஏராளமானோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.