வலிமை அப்டேட் தருகிறாரா யோகி பாபு?

227

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விஸ்வாசம்’, இப்போ ‘வலிமைன்னு 4 படங்களில் அஜித்துடன் நடித்துள்ளேன். முதல் 3 படங்களுடைய ஷூட்டிங்கில் என்னிடம் அவர் அடிக்கடி ‘யோகிபாபு ஏன் இன்னும் பொண்ணு பார்க்கலை, ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை’ன்னு கேட்டுட்டே இருப்பார்.
‘நான் பொண்ணைப் பார்க்குறேன். பொண்ணுதான் என்னைப் பார்க்கமாட்டிங்குது சார்னு சொன்னேன். ‘கவலைப்படாதே, சீக்கிரம் உனக்குக் கல்யாணம் ஆகும் பாரு’ன்னு சொன்னார். ‘வலிமை’ ஷூட்டிங்ல பார்த்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டு கட்டிப் பிடிச்சு, ‘குடும்பம்தான் முக்கியம்’னு நிறைய அறிவுரை சொன்னார் இப்படி சம்மந்தமே இல்லாமல் அஜித் பற்றி யோகி பாபு பேச காரணம் என்ன என்று கோலிவுட்டில் விசாரித்த போது வலிமை படத்தின் அப்டேட் என்று தன்னால் முடிந்ததை தந்துள்ளாராம் யோகி பாபு.


இவருக்கு ஒரு பழக்கம் இருக்கு யோகி பாபு நடிக்கும் படத்தின் பூஜை அன்று இந்தப் படத்தில் நான்தான் ஹீரோ என்பார். ஆடியோ ரிலீசிலும் அதையே சொல்வார், பிரஸ்மீட்டிலும் அப்படியே பேசுவார். ஆனால் பாருங்கள் அந்தப் படம் ரிலீசாகி படம் அவுட்டுன்னு ரிசல்ட் வந்தால் நான் இந்தப்படத்தில் ஹீரோ கிடையாதுங்க. யாராவது அப்படி சொன்னீங்கன்னா அவங்க மேலே ஆக்ஷன் எடுப்பேன்னு தாம் தூம்முன்னு குதிப்பாரு.
மறுபடியும் அடுத்தப் பட பூஜைக்கு நான்தான் ஹீரோன்னு சொல்வாரு யோகி பாபு.