சரவணசக்தி இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குலசாமி’…

மொத்தத்தில் இந்த குலசாமி பலசாமியா அல்லது எதிரிகளை வெளுக்கும் வலுவான சாமியா...

158

இயக்குனர் சரவணசக்தி இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குலசாமி’…

இந்த படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி, வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்…

 

இந்த படத்தில் நடிகர் விமல் ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாங்கிட் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார்…

இந்த படத்தின் கதை என்ன வாங்க பாக்கலாம்…..

ஆட்டோ ஓட்டும் விமலுக்கு அவர் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்பது கனவு அதற்காக ஊரே சேர்ந்து டாக்டருக்கு படிக்க வைக்கிறார்கள்… படிக்கப் போன இடத்தில் பணம் கட்ட முடியாத இளம் மாணவிகளை பார்த்து அந்த கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் கண்ணகி பாலியல் தொழிலுக்கு வலை விரிக்கிறார்…

இதனால் பல மாணவிகள் பாதிக்கப்படுகிறார்கள் இப்படித்தான் விமலின் தங்கையும் பாதிக்கப்பட்டு இருப்பார் என்று கோணத்தில் கதை செல்கிறது தங்கையை இழந்து விமல் படம் முழுவதும் சோகமாக குடித்துக் கொண்டே வருகிறார்…

 

இன்னொரு கல்லூரி மாணவியான தானியா ஹோப் இதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார் அவளை கொலை செய்ய நினைக்கும் அந்த கும்பலுடன் விமல் மோதி எல்லோரையும் சட்டத்தின் முன் என்கவுண்டர் செய்ய வைக்கிறார் இதுதான் கதை

இந்த படத்தின் பிளஸ் பாயிண்ட் விஜய் சேதுபதியின் வசனம் தான்…

விமல் பேசும் பல வசனங்கள் காக்கி சட்டையை குறி வைத்து எழுதி இருக்கிறார்…

காக்கி சட்டை கரையா இருக்கு தொடச்சிக்குங்க என்பதும் பிடிக்காதவங்க இருந்தா கைகால ஒடச்சிடுவீங்க என்று சொல்வதும்… கல்லூரி மாணவிகள் பீஸ் கட்ட பணம் இல்லாமல் தவிக்கும் பொழுது ஆ ர் டி யோ ஆபீசில் ரைடு வருகிறது என்று சொல்லி பணத்தை வெளியே தூக்கி போட சொல்வது… பொள்ளாச்சி சம்பவம் போல் மாணவியை பெல்டால் அடிப்பதும் வீடியோ எடுத்து பாலியல் பலாத்காரம் செய்வதும் அதிகாரிகளுக்கு விருந்தாக்குவதும் இப்படி படம் முழுவதும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை வன்மையாக கண்டித்து இருக்கிறார் இயக்குனர் அதற்காக பாராட்டுக்கள்…

விமலுக்கு இந்த படத்தில் காதல், நகைச்சுவை , கலாட்டா, எதுவும் இல்லாமல் தங்கையை இழந்த சோகமாக படம் முழுக்க வருகிறார் தங்கை இறக்கும் பொழுது நன்றாகவே நடித்திருக்கிறார்…

தங்கை அதிக மதிப்பெண் வாங்கி கொண்டு இருக்கிறார் என்று தெரிந்த சந்தோஷப்படுவதும் எதிரிகளை பந்தாடுவதும் ஒவ்வொருவரையும் குறி வைத்து நூதன முறையில் கொள்வதும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விமல்…

 

குற்றங்களை கண்டுபிடிக்கும் மாணவியாக தான்யா ஹோம் குற்றச்செயலையில் ஈடுபடும் கும்பலாக பல இளைஞர்கள் இயக்குனர் மகன் சூர்யா மற்றும் பலர் நல்ல பங்களிப்பை தந்திருக்கிறார்கள்…

 

வினோதினி கண்ணகி என்ற கதாபாத்திரத்தில் கல்லூரியில் இருந்து கொண்டு பல பெண்களின் கற்புக்கு விலை பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்…

மகாலிங்கம் இசையமைத்து இருக்கிறார் பாடல்கள் நன்றாக இருக்கிறது ரவிசந்திரன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்…

மற்றும் போஸ் வெங்கட் குட்டி புலி சரவணன் சக்தி கர்ண ராஜா மகாநதி சங்கர் முத்துப்பாண்டி ஜெயசூர்யா என பெரிய பட்டாளமே நடித்திருக்கிறார்கள்…

பெண்களுக்கு இன்று பாலியல் வன்கொடுமைகள் எல்லா பக்கத்திலும் நடக்கிறது மாமன் , மச்சான் , அக்கம் , பக்கம், கல்லூரிக்கு போகும் இடம் , மொட்டை மாடியில் , படிக்கும் போதும், எல்லா இடங்களிலும், வன்முறை தாண்டவம் ஆடுகிறது பெண்கள் என்ன செவ்வாய் கிரகத்திலா குடியிருக்க முடியும் என்ற வசனம் நெஞ்சைத் தொடுகிறது…

 

இயக்குனர் குட்டிப்புலி சரவணன் ஒரு நல்ல கதையை தேர்வு செய்திருக்கிறார் இன்றைய சமுதாயத்திற்கு என்ன தேவையோ அதை அருமையாக கொடுத்திருக்கிறார் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது எந்த இடத்திலும் படம் விறுவிறுப்பு குறையவில்லை…

ஒரு மணி ஆகிவிட்டால் இறந்து கிடக்கும் தன் தங்கையை தேடிவரும் அந்த காட்சியும் இறந்து போன தங்கை உடலை மருத்துவ கல்லூரிக்கு கொடுப்பதும் அற்புதமான காட்சிகள்…

மொத்தத்தில் இந்த குலசாமி பலசாமியா அல்லது எதிரிகளை வெளுக்கும் வலுவான சாமியா பெண்கள் தங்களில் ஒருவராக நினைக்கும் அண்ணன் சாமியா என்பதை இந்த குலசாமி பார்த்தால் தெரியும் நிச்சயம் ஒரு தடவை பார்க்கலாம் குலசாமி தப்பு செய்யாது… min