” தீர்க்கதரிசி ” இவன் ஒரு உண்மையான தீர்க்கதரிசி தான்

எல்லா உயிரும் ஒன்றுதான் என்று கூறும் அற்புதமான செண்டிமெண்ட் இருந்த கிரைம்திரில்லர்...

107

 

” தீர்க்கதரிசி ” திரை விமர்சனம்

ஸ்ரீ சரவணா ஃபிலிம்ஸ் சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’….

இந்த படத்தின் இயக்குனர்கள் மிகச்சிறந்த இயக்குனர்களிடம் இருந்து வந்தவர்கள் என்பது படத்தில் மேக்கிங்களும் திரைக்கதையிலும் நன்றாக தெரிகிறது தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்திருக்கிறார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள்…

ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக வந்துள்ளது அதோடு சத்யராஜ் நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துஷ்யந்த் ஜெய் வந்த் இருவர் நடிப்பும் நன்றாக இருக்கிறது….

தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குனர்கள் வரிசையில் இந்த இயக்குனர்களும் இணைந்து உள்ளனர். ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக உள்ளது…

அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிய வருகிறது…

 

சரி படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்…

அடையாறு பகுதியில் தனியாக இருக்கும் ஒரு பெண் கொல்லப்படுவாள் அவரைக் காப்பாற்றுங்கள் என்று போலீஸ் கன்ட்ரோல் துறைக்கு போன் வருகிறது அவர்கள் அலட்சியப்படுத்தவே ஊடகங்களும் தெரியப்படுத்திவிட்டு அந்த கொலை நடந்து விடுகிறது…

அதன் பிறகு நந்தனம் சிலை அருகே ஒரு ஆக்சன் நடக்கப்போகிறது என்று போன் வருகிறது அதே போல ஒரு ஆக்சன் நடக்கிறது…

வங்கியில் 77 கோடி ரூபாய் பரிபாகப் போகிறது என்று ஒரு குரல் போன் மூலம் வருகிறது அதே போல அந்த பணம் போகிறது…

 

ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து ஒரு பெண் இறக்கப் போகிறார் என்று தகவல் வருகிறது அதேபோல காருக்குள் இருக்கும் சிலிண்டர் வெடித்து அந்த பெண்  இறக்கிறாள்…

இப்படி தீர்க்கதரிசியாய் போலீஸ் கன்ட்ரோல் துறைக்கும் ஊடகங்களுக்கும் சொல்லிவிட்டு கொலை செய்யும் அந்த நபர் யார் இதை கண்டுபிடிக்கும் டீமில் அஜ்மல் துஷ்யந்த் ஜெய் வந்து ஸ்ரீமன் ஓகே மதுமிதா இப்படி பலரும் பரபரப்பாக செயல்படுகிறார்கள் ஆனால் படத்தின் இறுதி வரை அந்த தீர்க்கதரிசி யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை…

படம் செம சஸ்பென்ஸ் ஆக போகிறது நல்ல விறுவிறுப்பாக போகிறது பரபரப்பான காட்சிகள் இருக்கிறது அடுத்து என்ன அடுத்து என்ன என்று நம்மை சீட்முனைக்கே வர வைக்கும் திரைக்கதை இருக்கிறது எந்த இடத்திலும் கதை இப்படித்தான் போகும் என்று நம்மால் யூகிக்க முடியவில்லை அது சிக்சர் நடித்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் படத்தின் ஒளிப்பதிவு அற்புதம் பின்னணி இசை நன்றாக இருக்கிறது காவல்துறை அதிகாரிகளால் வரும் எல்லோரும் காட்சிகள் நன்றாக இருக்கிறது அரங்க அமைப்பு நன்றாக இருக்கிறது எடுத்துக் கொண்ட கதை நன்றாக இருக்கிறது…

 

கிளைமாக்ஸ் இல் படத்தை முடித்த விதம் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது தவறு செய்தவர்கள் தண்டனை அடைந்தே தீர வேண்டும் என்ற தத்துவத்துடன் படம் முடிகிறது…

ஆணவ கொலை என்ற பெயரில் இன்று காதல் செய்பவர்களை கொலை செய்யும் சில மிருகங்களுக்கு இந்த படம் நல்ல போதனையை சொல்லி இருக்கிறது…என்ன சொல்லி என்ன சில மிருகங்கள் எப்படி திருந்து போவதில்லை….

 

மொத்தத்தில் இந்த தீர்க்கதரிசி பாராட்டப்பட வேண்டியவன் வரவேற்கப்பட வேண்டியவர் எல்லா உயிரும் ஒன்றுதான் என்று கூறும் அற்புதமான செண்டிமெண்ட் இருந்த கிரைம்திரில்லர் படத்தை கொடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்…..