படத்துல அருவா வச்சு எல்லாரையும் வெட்டியே கொல்றாங்க!!!

ஆனா படம் பார்க்க போன நம்பள கத்தியே கொல்றானுங்க...

88

லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் ருத்ரன்…

படத்துல அருவா வச்சு எல்லாரையும் வெட்டியே கொல்றாங்க… ஆனா படம் பார்க்க போன நம்பள கத்தியே கொல்றானுங்க…

 

 

சரி வாங்க படத்தோட விமர்சனம் என்னவென்று பார்த்துவிடுவோம்…

 

படத்தின் தொடக்கத்துல நம்ப ருத்ரன் குழந்தை போல

நடிக்க ஆரம்பிச்சு தன் அம்மா அப்பாவோட ஜாலியா விளையாடிகிட்டு பிரண்டோட குடிச்சுக்கிட்டு ஜாலியா இருக்கும் நம்ம ருத்ரன்… பிறகு ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பிக்கிறார்…

 

காலம் காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிற ஹீரோ கதாபாத்திரமா தான் நம் ஹீரோ இருக்காரு அப்பா கிட்ட காசு வாங்கிட்டு பிரண்டோட குடிச்சிகிட்டு ஜாலியா இருக்கும் நம் ஹீரோவோட அப்பா அம்மா யாருன்னு பாத்தீங்கனா பூர்ணிமா பாக்யராஜ் அம்மாவும் நாசர் அப்பாவும் நடிச்சிருக்காங்க…

 

 

ஒரு கட்டத்துல நம்ம ஹீரோவுக்கு வேலை கிடைக்க அதுக்கும் ஒரு பார்ட்டி தான் அந்த இடத்துல நம்ம ஹீரோயினை சந்திக்கிறாரு அதுதான் நம்ம பிரியா பவானி சங்கர்…

 

 

பார்த்தவுடன் காதல் என்பது போல் தான் நம்ம ஹீரோக்கும் காதல் வருது… அது ஹீரோயின் கிட்ட சொல்ல ஹீரோயின் ஒத்துக்குறாங்க பிறகு என்ன டும் டும் டும் கல்யாணம் தான்… ஆனா இதுக்கு நடுவுல தான் கதையோட முக்கியமான விஷயமே நடக்குது…

 

நம்ப ருத்ரன் ஓட அப்பா நாசர் இவர் பிஸ்னஸ்காக ஒருத்தரிடம் ஆறுகோடி கடன் வாங்க இவர் கூட இருந்த நண்பன் இவரை ஏமாற்றி அந்த ஆறு கோடியை ஆட்டைய போட்டுட்டு போயிடுறாரு இந்த ஆறு கோடிக்காக லண்டனுக்கு போய் சம்பாதிக்கும் நம் ருத்ரன்…

பிறகு நம்ம சரத்குமார் அவர்தான் இந்த வெளிநாட்டுக்கு போய் வேலை செய்ற பிள்ளைகள் ஊருக்கே திரும்ப வரதில்ல அவங்களோட அப்பா அம்மாவ பகடைய வச்சு அவங்களுக்கு ஊசி போட்டு அவர்களை கொன்னுட்டு அவங்களோட சொத்து எழுதி வாங்கிக்கிறாங்க இதே மாதிரி தான் ருத்ரன் ஓட அம்மாவையும் கொன்னுடுறாங்…

இது தெரியாத ருத்ரன் ஊருக்கு வர பிறகு தன் அம்மாவை கொன்னது சரத்குமார் தான் தெரிஞ்சு சரத்குமாரையும் அவர் கூட இருக்கும் அனைவரையும் கொள்ள நினைக்கிறார் நம்ம ஹீரோ…

 

இதன்பிறகு பூமிக்கும் ருத்ரனுக்கும் நடுவே நடக்கும் போராட்டம் தான் இந்த ருத்ரதின் மீதி கதை வென்றது பூமியா ருத்ரனா…

 

படத்தில் இரண்டு ரீமிக்ஸ் பாடல்கள் அருமையான பாடல்கள் ஆனால் டான்ஸ் சுமார் தான் இதில் லாரன்ஸ்க்கு வைக்கப்பட்டிருக்கும் விக்குதான் படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்…

 

படத்துக்கு மியூசிக் ஜிவி பிரகாஷ் பேக்ரவுண்ட் நம்ப Sam c s அடிச்சு பட்டையை கிளப்பிற்காக காது பிஞ்சு கிழிஞ்சி ரத்தம் தான் வரல…

 

படத்துல காதல் காட்சிகள் கொஞ்சம் சுமார் எமோஷன் கொஞ்சம் தூக்கல் சண்டை காட்சிகள் தான் அய்யய்யோ முடியல…

 

ஒட்டு மொத்தமா படத்த ஒரு முறை தியேட்டர்ல போய் பாருங்க மெயினா படத்தோட எண்டு கார்டுல ருத்ரன் 2 க்கு குறிப்பு கொடுத்திருக்காங்க அதை பார்த்துட்டு பயப்படாம வீட்டுக்கு வந்துருங்க…

மொத்தத்தில் இந்த ருத்ரனோட ஆட்டம் எமோஷன்,காதலோடுகலந்து ஸ்கிரீனுக்கு வெளியே இருக்கும் நம்மளுடைய காது கிழிஞ்சது தான் மிச்சம்…