கடைசியா இந்த சொப்பன சுந்தரி யார் வச்சிருக்காங்கன்னு தெரியாமலேயே போயிடுச்சு!!!

82

சொப்பன சுந்தரி விமர்சனம்…

‘லாக்கப்’ பட இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸின் அடுத்த படைப்பு தான் சொப்பன சுந்தரி. இதில், ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து தீபா, லக்ஷமி பிரியா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் இல்லை இல்லை வாழ்ந்து இருக்கிறார்கள்…

அஜ்மலின் இசையும், பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜ கோபாலின் ஒளிப்பதிவும் இந்த படத்திற்கு மேலும் கூடுதல் பலம்…..

 

கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் அவருக்கு ஒரு அம்மா, வாய் பேச முடியாத அக்கா, உடல்நிலை சரியில்லாத அப்பா, குடும்பத்தையே கவனிக்காமல் தன் வாழ்க்கை தான் முக்கியம் என்று போகும் அண்ணன்… இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த கதை…

 

இந்த சொப்பன சுந்தரி யார் வச்சிருக்காரு அதே கேள்வியோடு தான் ஸ்டார்ட் ஆகுது இந்த படம்….

 

தொடக்கத்திலேயே நம் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ஒரு ஒரு நகைக்கடை மூலமா பம்பர் பரிசு வேது அதுதாங்க நம்ம சொப்பன சுந்தரி காரு அதுவும் ஷிப்ட் ரெட் கலர் அதுல பாருங்க நமக்கு வேற ரொம்ப பிடிச்ச காரு…

 

சரி கதைக்குள்ள போயிடுவோம் அந்த கார வச்சி 5 ஆயிரம் கடனை அழைக்கலாம்னு நினைக்கிற அம்மா தன்னோட அக்காவை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை வந்து இந்த காரை எனக்கு கொடுத்தா நான் உங்க அக்காவ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றாங்க ஐஸ்வர்யா ராஜேஷ் அக்காவுக்கு கல்யாணம் ஆகணும் அப்படின்னு அந்த காரை கொடுக்க ஒத்துக்கிறாங்க பிறகு அண்ணன் வந்து நிக்கிறாரு இந்த கார் எனக்கு தான் அப்படின்டு அதுக்கு பின்னாடி தாங்க கதையை ஆரம்பிக்குது…

 

அண்ணனுக்கு கார் குடுக்க மாட்டேன் அப்படின்னு மறுக்கிற ஐஸ்வர்யா ராஜேஷ் பயந்துகிட்டு இருக்க அக்காவும் அக்காவ கல்யாணம் பண்ணிக்க போற கணவரும்…

 

கடைசியாக கார் போலீஸ் ஸ்டேஷன் போக கார் யாருக்கு கிடைத்தது இவங்க ரெண்டு பேரையும் தாண்டி மூன்றாவது ஒரு நபருக்கு கிடைக்குதா? அப்படின்றதா மீதி கதை இந்த கதைல கமர்ஷியலா இருக்கணும்னு சொல்லிட்டு காமெடியை நல்லாவே கலந்திருக்காங்க அதிலும் தீபா அவங்களோட காமெடி ரொம்ப அருமையா ஒர்க் அவுட் ஆயிருக்கு சொல்லலாம்…

 

படத்துல ஒரு பக்கம் கிங்ஸிலி காமெடி ஒரு பக்கம் Rj சாரா காமெடி ஒரு பக்கம் கருணாகரன் ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் மறு ஒரு பக்கம் நம்ம தீபா இவங்க எல்லாருடைய காமெடி கலக்கட்டுனாலும் இங்கே ஒரு இடத்துல தொய் விருந்துகிட்டே இருக்கு இங்கே ஒரு இடத்துல காமெடி பத்தல அப்படின்ற ஒரு தோணல் நமக்கு குடுத்துகிட்டே இருக்கு இதுதான் இந்த படத்தோட பெரிய மைனஸ்…

 

எப்படியோ ஒரு வழியா சமாளிச்சு கிளைமாக்ஸ் கொண்டு வந்தாலும் படத்துல அங்கங்க வர சிரிப்பு காட்சிகள் மட்டும் தான் படத்தோட பிளஸ் ன்னு சொல்லணும் மைனஸ்னு சொல்லணும் இன்னும் படத்துல ஸ்கிரீன் பிளேல கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தாங்கன்னா படம் இன்னும் நல்லாவே இருந்திருக்கும்…

 

இந்த படம் பார்த்த பிறகு தான் தெரியுது அட என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை ஒரு காமெடி ஸ்கிரீன் பிளே எழுத ஆள் இல்லையா அப்படின்னு தோணுது…

 

இருந்தும் இந்த தமிழ் புத்தாண்டுக்கு குடும்பத்தோட போயிட்டு சந்தோஷமா பாத்துட்டு வரக்கூடிய படங்கள்ல இந்த சொப்பன சுந்தரி ஒன்னு தைரியமா போயி படத்தை பார்த்துட்டு வாங்க…

 

மொத்தத்தில், குடும்பத்துடன் 2 மணி நேரத்தை சிரித்து செலவிட நினைத்தால், இந்த படத்தை திரையரங்கிற்கு சென்று தாராளமாக பார்க்கலாம்.

 

கடைசியா இந்த சொப்பன சுந்தரி யார் வச்சிருக்காங்கன்னு தெரியாமலேயே போயிடுச்சு!!!6