அதேகண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’. பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் ஜி.ஆர்.சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத்திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை பிரசன்னா ஜி.கே மேற்கொண்டிருக்கிறார்.
[
ஜெய் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கல்லூரியில் படிக்கும் பொழுது காதலிக்க தொடங்குகிறார்கள்
ஐஸ்வர்யா ராஜேஷின் பெற்றோர்கள் இவர்களின் திருமணத்திற்கு குறுக்கே நிற்க ஜெய் சிவதாவை கைப்பிடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் அஜ்மத்தை கைப்பிடிக்கிறார் ஐஸ்வர்யாவின் கணவர் ஒரு கோபக்காரர் எடுத்ததற்கெல்லாம் மனைவியை அடிக்கும் கணவன் இதனால் நிம்மதி இல்லாமல் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்
ஜெய் அன்பானவர் மனைவியை போற்றுபவர் குடும்பத்தை உயிராக நினைப்பவர் இருவரும் தற்செயலாக பெங்களூர் செல்லும் பொழுது சந்திக்கிறார்கள் மனம் விட்டு பேசுகிறார்கள் பழைய காதல் நினைவுகளை அசைபோடுகிறார்கள் இதனால் ஜெயின் மீது ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மீண்டும் காதல் திரும்புகிறது
ஜெய் யை உன் குடும்பத்தை விட்டு
வெளியே வா இருவரும் சேர்ந்து வாழலாம் என்று கூப்பிடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்
தன் குடும்பத்தை விட்டு வர முடியாது என்கிறார் ஜெய் முடிவு என்ன
ஜெய் ஸ்வதா ஐஸ்வர்யா ராஜேஷ் அஜ்மத் இவர்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது அதிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் பொங்கி எழுந்து கணவனுக்கு ஓங்கி ஒரு அறை விடுவது தியேட்டரில் கைதட்டல
சிவதா நடிப்பு அருமையாக இருக்கிறது ஒரு குடும்பத் தலைவியாக பொறுப்பான அம்மாவாக நன்றாகவே நடத்தி இருக்கிறார
ஜெய் ராஜா ராணி படத்திற்கு பிறகு இந்த படத்தில் அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார் இசை சித்து குமார் நன்றாக இருக்கிறது
இயக்குனர் தரமான படத்தை கொடுத்ததற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள் மொத்தத்தில் இந்த தீரா காதல் கல்யாணம் ஆனவர்கள்மீண்டும் தங்கள் பழைய காதலை அசை போட வைக்கும்…