யாத்திசை படத்தின் விமர்சனம்…
பாண்டியனை கருவறுக்க வரும் எயினர் குலம்… கருவறுத்தார்களா இல்லையா போர் மூன்டதா இல்லையா சோழர்கள் எய்னர் களுக்கு உதவி செய்தார்களா இல்லையா ஏழாம் நூற்றாண்டில் தமிழர்களின் பேச்சு வழக்கு எப்படி இருந்தது
பெரிய நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது அங்கு வாழும் சிறு குடிகள் எப்படி கொத்தடிமைகளாக மாற்றப்ப
பிரம்மாண்டம் என்பது பட்ஜெட்டில் கிடையாது என்பதை நிரூபிக்கும் வகையில் யாத்திசை படம் எடுக்கப்பட்டுள்ளது…
தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் கே ஜே கணேஷ் தயாரித்திருக்கும் இப்படம் வரலாற்று பின்னணியை கொண்ட அதிரடி சாகச படமாக உருவாகிஉள்ளது…
எட்டு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இவ்வளவு மினிமம் பட்ஜெட்டில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என்று பலரும் அசந்து போகும் அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் இருக்கிறது ஒவ்வொரு காட்சியும் உலக தரத்துடன் இருக்கிறது.
விசுவல் காட்சிகள் முதல் சவுண்ட் எபெக்ட் வரை அனைத்துமே பிரம்மாண்ட படங்களுக்கு நிகராக இருக்கிறது. அதிலும் இரு தரப்பினருக்கிடையே நடக்கும் அந்த சண்டை காட்சி வேற லெவலில் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. ஆனால் இப்படம் மொத்தமே 8 கோடி பட்ஜெட் தான் என்பது வியப்பாக இருக்கிறது…≈
படத்தின் ஒளிப்பதிவு ஆடை வடிவமைப்பு ஒப்பனை திரைக்கதை நடிப்பு இயக்கம் என பலவகை பிரிவுகள்
விருதுக்கு காத்திருக்கிறது இந்த படம்..
7 ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற கதைக்களத்தில், சோழ-பாண்டிய உறவை பற்றிய தொழில்நுட்பம் வியக்க வைக்கிறது…
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் என்ன பாஷை பேசி இருப்பார்கள் என்பதை அறிந்து அதே பாசையில் பேசியும் நடிக்கவும் வைத்திருக்கிறார்…
இதன் கதைகள் நான்கு பாகங்களாக பிரிந்து இருக்கிறது…‘
யாத்திசை’.
ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல் குடிகன் எய்னர் என்று ஒரு பகுதி மக்கள் வாழ வழியின்றி கொத்தடிமைகள்போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..
நல்ல உணவு வேண்டும் நல்ல மாளிகையில் வசிக்க வேண்டும் தனக்கு பிறகு தங்கள் மக்கள் மாளிகையில் வசிக்க வேண்டும் தன் மகன் அரசனாக பிறக்க வேண்டும் என்று கனவு காண்கிறான் கொதி…
அந்த கூட்டத்தின் தலைவன் போருக்கு பயப்படாதவன் வீரத்திற்கு வெற்றி வாகை சூடுபவன் தைரியமாக முடிவெடுப்பவன் அவன் தான் கொதி…
பாண்டிய மன்னனின் தளபதி ரணவீரனை ஒழித்தால் தான் நாட்டை கைப்பற்ற முடியும் என்று திட்டமிடுகிறான் தனது படையில் உள்ள வீரர்களை சிறு சிறு குழுவாக பிரித்து பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் குடியேற வைக்கிறான்…
ரணவீரன் மலைக்கோட்டைக்கு சாமி கும்பிட வரும்பொழுது குறுகலான பாதை சிறு கூட்டம் கொஞ்சம் வீரர்கள் தான் வருவார்கள் அப்போது ரணவீரனை கொன்று விடலாம் என்பது கொதியின் திட்டம்….
ஆனால் நடந்ததோ வேறு ரண வீரன் தப்பி விடுகிறான் பெரும்பள்ளி மக்களோடு சேர்ந்து இழந்த நாட்டை மீட்க நாள் பார்த்து காத்திருக்கிறான் பெரும்பள்ளி மக்களின் தலைவி தன் மகளை திருமணம் செய்து கொடுத்து வெற்றியோடு போய் அனுப்புகிறாள்….
அப்போது கொதி சோழநாட்டுக்கு தன் மெய்காப்பாளனான துடி என்ற வீரனை அனுப்பி உதவி கேட்கிறான்…
அவன் படையோடு வரும்பொழுது ரணவீரனின் ஆட்கள் கையால் கொல்லப்படுகிறான்தான் போரில் தோற்பது உறுதி என்று தெரிந்ததும் கொதி ஒரு திட்டமிடுகிறான் அந்தத் திட்டம் என்ன அந்த திட்டத்தில் அவன் வென்றானா பாண்டிய மன்னனின் தளபதி ரணவீரன் வென்றானா இதுதான் படத்தின் கதை…
புதுமுகங்களை வைத்துக்கொண்டு இப்படி ஒரு சிறப்பான படைப்பை கொடுத்ததற்கு இயக்குனருக்கு பாராட்டு தெரிவிக்கலாம்…
இசையமைப்பாளர் சக்ரவர்த்தி … இது பீரியட் படம் என்பதால் மிகவும் நுணுக்கமான இசையயை கொடுத்துள்ளார்…
இசையில் பழங்குடி மக்களின் அந்த சத்தத்தை மிக்ஸ் கலந்து கொடுத்து படத்துக்கு விறுவிறுப்பை தந்து இருக்கிறார்…
தயாரிப்பாளர் கே ஜே கணேஷ் மிகவும் துணிச்சலோடு இந்த படத்தை தயாரித்திருக்கிறார…
இப்படத்திற்கு முழு உயிர் கொடுத்து இருப்பவர்கள் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் தான்…
இந்த படத்தில்….,
மழையேற்றம், அடர்ந்த குகை, பெரும் பள்ளி ,பெரும் பள்ளம் ,அரபிக் கடல், சோழநாடு ,நெல் விளைந்த பூமி ,மனிதனை காவல் கொடுக்கும் பலிபீடம் ,அழகான கோவில் சிற்பம் ,அழகான நாட்டியம், அற்புதமான குளக்கரை ,வீரம் சேர்ந்து தமிழர்கள் இப்படி எல்லா வகையிலும் ஒளிப்பதிவாளரும் ,இசையமைப்பாளரும் ,பட தொகுப்பாளரும் ,ஆடை வடிவமைப்பாளரும் அரங்கை நிர்மாணிப்பவர்களும், ஒப்பனையாளர்களும் ,பணிபுரிந்த அத்தனை போர் வீரர்களும் , நாயகன் விஜய் சேயோனும், சதீஷ் மித்ரன், ராஜலட்சுமி மற்றும் பல நடிகர்களும் படத்தை கம்பீரமாக தூக்கி நிறுத்துகிறார்கள்..
அனைவருக்கும் வாழ்த்துக்கள்…
- Design