இணையதொடர் டிசம்பர் 30, 2022 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது!
டிரெய்லரை இங்கு காணுங்கள் – https://www.youtube.com/watch?v=BamPAzF8wOY
மும்பை, 28th டிசம்பர் 2022:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தங்கள் அடுத்த ஒரிஜினல் வெளியீடான ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் பிரிவில் ‘ஆர் யா பார்’ தொடரின் அசத்தலான டிரெய்லரை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டது. ஒரு சாதாரண மனிதன் பின்தங்கிய நிலையில் உள்ள தன் பழங்குடியினரைக் காப்பாற்றி நவீன உலகில் வாழ முயலும் கதை தான் இந்த தொடர். ஆக்ஷன்- கலந்த இந்த டிராமா தொடரை சித்தார்த் சென்குப்தா உருவாக்கியுள்ளார். Edgestorm Ventures LLP சார்பில் ஜோதி சாகர் மற்றும் சித்தார்த் சென்குப்தா தயாரித்துள்ளனர். க்ளென் பரெட்டோ, அங்குஷ் மொஹ்லா மற்றும் நீல் குஹா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள இந்தத் தொடர் டிசம்பர் 30, 2022 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில்
தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்த அதிரடி ஆக்சன் டிராமா தொடரை ஆதித்யா ராவல், பத்ரலேகா, சுமீத் வியாஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, திப்யேந்து பட்டாச்சார்யா, ஆசிப் ஷேக், ஷில்பா சுக்லா, வருண் பகத், நகுல் சேதேவ் மற்றும் பலர் இணைந்து உருவாக்கியுள்ளனர். வில்வித்தையில் அசாத்திய திறமை கொண்ட சர்ஜு எனும் நாயகன் பாத்திரத்தில் ஆதித்யா ராவல் நடித்துள்ளார். பெரும் குற்றங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கூலிப்படை கொலையாளியாக அவர் மாறுகிறார். வஞ்சகமும் ஊழலும் மிகுந்த அரசியல்வாதிகள் சூழ்ந்த நவீன உலகில், தான் சார்ந்த பழங்குடியினரின் உயிர்வாழ்விற்காக போராடுகிறார்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தயாரிப்பாளருமான சித்தார்த் சென்குப்தா கூறுகையில்..,
“இரண்டு வெவ்வேறு உலகங்கள் ஒன்றாக கலக்கும் போது, அவைகளுக்குள் அடிக்கடி மோதலும் குழப்பமும் ஏற்படும். பேராசை மிகுந்த அதிகார உலகில் ஒரு இனம் உயிர்வாழப் போராடும் கதையை இந்த தொடர் கூறுகிறது. அட்டகாசமான திரைக்கதை அருமையான நடிகர்கள், பரபரப்பான திருப்பங்கள் என ரசிகர்களை மகிழ்விக்கும் அனைத்தும் இத்தொடரில் உள்ளது. உலகம் முழுக்க பிரபலமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் எங்கள் ஆர் யா பார் உலகை உலகளாவிய அளவில் பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் என்பது பெருமகிழ்ச்சி.
நடிகர் ஆதித்யா ராவல் கூறுகையில்..,
சர்ஜு எனும் அழகான பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். சர்ஜு தனது நிலத்தையும் மக்களையும் பாதுகாக்க விரும்புகிறார், மேலும் தனது இலக்கை நிறைவேற்ற எந்த எல்லைக்கும் செல்வார். ஒன்றின் பின் ஒன்றாக பல சவால்களை சமாளிக்கும் போது இக்கதாபாத்திரத்தின் வெவ்வேறு சாயல்களை நீங்கள் காணலாம். ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான “ஆர் யா பார்” தொடரில் சர்ஜுவாக நடிக்க எனக்கு வாய்ப்பளித்த சித்தார்த் சென்குப்தா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியோருக்கு நன்றி.
~ டிசம்பர் 30, 2022 அன்று முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் சர்ஜுவின் பயணத்தைத் காணுங்கள். ‘ஆர் யா பார்’ இணையத்தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரு முன்னணி ஸ்ட்ரீமிங் ஓடிடி தளமாகும். இது இந்தியாவில் பொழுதுபோக்கு, திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் வெற்றிகரமாக ஸ்ட்ரீம் செய்யும் மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் வழங்கி, மக்கள் பார்க்கும் விதத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளமானது சுமார் 8 மொழிகளில் 1,00,000 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான ஸ்லாட்டுகளை உலகம் முழுவதிலிருந்து வழங்கி வருகி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் லேட்டஸ்ட் அறிவிப்புகள் மற்றும் புதிய தொடர்கள் குறித்த விவரங்களுக்கு தொடருங்கள் (Instagram) @DisneyPlusHotstar, (Twitter) @DisneyPlusHS and (Facebook) @Disney+ Hotstar
மேலும் தகவல்களுக்கு, தொடர்பு கொள்ளுங்கள்:
ஷாலு ஷா
மக்கள் தொடர்பு | shalu.shah@hotstar.com
மெஹக் சிங்கி
மக்கள் தொடர்பு | mehek.singhi@hotstar.com