படக்குழு:
நடிகர்கள்: வடிவேலு, ஷிவானி நாராயணன், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்க்ஸ்லி மற்றும் பலர்.
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: விக்னேஷ் பாபு
எடிட்டிங்: செல்வா RK
தயாரிப்பு: லைகா ப்ரொடக்ஷன்ஸ்
இயக்கம்: சுராஜ்.
விமர்சனம்:
வடிவேலு கதாநாயகன் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நகைச்சுவை திரில்லரில் துப்பறியும் நபராக நடித்துள்ளார்.ஜாக்கி என்ற அதிர்ஷ்டமான நாய் யார் வீட்டில் இருக்கிறதோ அந்த குடும்பம் மிகவும் செழிப்பாக இருக்குமாம்.
காமெடி நடிகர் வடிவேலு ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடித்த திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். இயக்குனர் சுராஜின் தலை நகரம் திரைப்படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் ஆகும். நகைச்சுவை கலாட்டாவில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள
ஜாக்கி என்ற அதிர்ஷ்டமான நாய் யார் வீட்டில் இருக்கிறதோ அந்த குடும்பம் மிகவும் செழிப்பாக இருக்குமாம். வடிவேலு சிறுவயதில் இருக்கும்போது அந்த நாய் அவர் வீட்டில் இருப்பதால் அவர்களின் குடும்பம் செழிப்பாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த நாயை ஒருவர் திருடி சென்று விடுகிறார். திருடியவர் பெரிய பணக்காரனாகிறார்.
தை மறந்து நடிகர் வடிவேலு வளர்ந்து வேலை வெட்டி இல்லாமல் வெட்டியாக சுற்றித்திரியும் கதாநாயகனாக இருக்கிறார். ஏதாவது பெரிய பிஸினஸ் செய்து பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக பல வேலைகளை செய்து தோல்வியடைகிறார். இப்படியிருக்கையில் ஒரு ஜோசனையில் நாய்களை திருடி பணம் வேண்டலாம் என தோன்ற, அவ்ருக்கென ஒரு குழுவை உருவாக்கி பெரிய பணக்கார வீடுகளில் உள்ள நாய்களை திருடுகிறார்.
திருடிய பின் அந்த நாய்களின் முதலாளிகளிடம் மிரட்டி பேரம் பேசி பணத்தை பெற்று பெரிய ஹாங் ஸ்டாராக வளர்ந்து வருகிறார். சொல்லப்போனால் இந்தியாவின் நம்பர் வன் நாய் கிட்னாப்பர். இவ்வாறு இருக்கையில் ஒரு நாள் பெரிய வில்லன் ராவுரமேஷின் நாயை திருட முயற்சி செய்கிறார். அவர் தான் வடிவேலுவின் வீட்டில் நாயை திருடியவர். அந்த நாயை திருடியும் விடுகிறார்.
அதன் பின் வடிவேலுக்கு அந்த நாயின் கதை தெரிய வருகிறது. அதனால் அவர் அந்த நாயை அவர் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார். இந்நிலையில் இதனை கண்டுபிடிக்க ஆனந்த ராஜின் குழு நியமிக்கப்படுகிறது. அவர்கள் வடிவேலுவின் குழுவை துரத்துகிறார்கள். கடைசியில் வில்லனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன.? பணக்ககாரன் ஆகினாரா? நாய் யாரிடம் கடைசியில் இருந்தது என்பதே கதையாகும்.
படம் பார்க்கலாமா ? வேணாமா?:
நடிகர் வடிவேல் நீண்ட நாளுக்கு பிறகு கதாநாயகனாக காமெடியிலும் சரி நடிப்பிலும் சரி பிண்ணியுள்ளார்.
நடிகர் ஆனந்த ராஜா காமெடிவில்லனாக அற்புதமான பெர்போமன்ஸை தந்துள்ளார்.
சிவாங்கி மற்றும் ஷிவானி நடிப்பு வழமையாகவுள்ளது. ரெடின் கிங்ஸ்லி,மனோபாலா போன்றோர் அவரது காமெடியை சிறப்பாக செய்துள்ளனர்.
வில்லனாக ராவு ரமேஷ் அவரது கதாபாத்திரத்தை செய்துள்ளார். இசையில் சந்தோஷ் நாராயணன் அருமையாக செய்துள்ளார். 4 பாடலை வடிவேலை வைத்து பாடியுள்ளார். எடிட்டிங்,ஒளிப்பதிவு ஓகே.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸின் இயக்குனரான சுராஜ், ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை எழுத எந்த முயற்சியும் எடுக்கவில்லை, ஆனால் காமெடி மூலம் படம் பண்ண முயற்சி செய்துள்ளார். மற்றபடி படத்தின் டெக்னிக்கல் அம்சங்கள் மிகவும் சாதாரணமானவை,
மதிப்பீடு: 3/5
நடிகர் வடிவேலுவின் கம்பேக்காக இருந்தாலும் சில இடங்களில் சொதப்பப்பட்டுள்ளது. இருந்தாலும் காமெடிகளை ரசிக்கலாம். குடும்பத்துடன் மற்றும் சிறுவர்களுடன் ஜொலியாக பார்க்கலாம்.