கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53வது சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது.
இதில் சர்வதேச போட்டிக்கான தேர்வுக் குழுவிற்கு இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய அவர், “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரசார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம்.
இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று பேசினார்.
இஸ்லாமியர்களின் மீது வெறுப்புணர்வை தூண்டும் இந்த படத்திற்கு பல மாநிலங்கள் வரிவசூல் அளித்தது. பிரதமர் நரேந்திரமோடி பாராட்டியிருந்தார். 50 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. அப்படியான ஒரு படத்தை இஸ்ரேல் இயக்குனர் வச்சு செஞ்சது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.