மீண்டும் கவுண்டமணி ஹீரோ

நடிச்சா ஹீரோவாத்தான் நடிப்பேன்னு அடம்பிடிக்கிற கவுண்டமணி அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் வாத்தியார் பழனிச்சாமி. தற்போது பேய கணோம் என்ற படத்தை பல வருடங்களாக எடுத்துக் கொண்டு வரும் செல்வ அன்பரசன் இயக்குகிறார். ஓவியாவை விட்டா யாருங்ற உப்புமா படத்தை எடுத்த பி.ஆர்.ஓ மதுரை செல்வம் தயாரிக்கிறார். கவுண்டமணியை ஆபீசில் சந்தித்து போட்டோ எடுத்துட்டு வந்திருக்காங்க. பார்க்கலாம் படம் வருதான்னு.

Comments (0)
Add Comment