பாடலாசிரியரை பாராட்டிய விஜய்சேதுபதி

சினிமாவில் யாருக்கு எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது.பொழுது விடிவதற்குள் ஒருவரைப்புகழ் பெற்றவர்களாக மாற்றி விடக் கூடியது சினிமா.
அந்த வகையில் ஒரு பாடல் எழுதி அந்தப் பாடல் வைரலாகி யார் இவர்? என்று கேட்கும் அளவிற்குப் பிரபலமாகிவிட்டார் விஜய் முத்துப்பாண்டி.

இவர் எஸ்.ஏ.சந்திரசேகர் சீமான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக வாழ்வைத் தொடங்கியவர்.அப்போது அங்கே மூத்த உதவி இயக்குநர்களாக இருந்த பொன்ராம்,எம் ராஜேஷ் ஆகியோருடன் நல்ல நட்பு கொண்டு பழகியவர்.
பொன்ராம் தனியே இயக்குநர் ஆனதும் இவர், அவரிடம் இணை இயக்குநர் ஆகிவிட்டார்.

இப்போது முத்துப்பாண்டி பொன்ராமிடம் விஜய் சேதுபதி நடிக்கும்’ DSP’ படத்தில் இணை இயக்குநராகப் பணிபுரிகிறார்.அந்தப் படத்திற்கான சூழலுக்கு ஏற்ற மாதிரியாக “பூவோடும் பொட்டோடும் நல்லா இரும்மா” என்ற பாடலை எழுதியுள்ளார்.பாடல் இணைய உலகில் வெளியான சில மணி நேரங்களில் மில்லியன் தாண்டி பார்வைகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.

இப்பாடல் உருவான பின், அதைக் கேட்ட DSP படத்தின் நாயகன் விஜய் சேதுபதி, முத்துப்பாண்டியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு,”பாட்டு செம்மையாக இருக்கிறது வரிகள் ரொம்ப அழகாக டிரண்டியாக இருக்கிறது” என்று பாராட்டியிருக்கிறார். அதை நினைத்து இப்போதும் மகிழ்ச்சியில் நனைந்து கொண்டிருக்கிறார் விஜய் முத்துப்பாண்டி.

Comments (0)
Add Comment