நீதிபதி கல்வித்தகுதி குறித்து வழக்கு தொடர்ந்த வக்கீலுக்கு ரூ.5 லட்சம் அபராதம்

251

சென்னை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு பதிவாளராக நீதிபதி பூர்ணிமா பணியாற்றி வருகிறார். இவர் முறையான கல்வி பெறவில்லை. அதாவது, 12-ம் வகுப்பு படிக்காமலேயே நேரடியாக சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் பி.காம். பட்டப்படிப்பை முடித்துள்ளார். அதை தொடர்ந்து மைசூரில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை மேற்கொண்டுள்ளார். இதை கவனிக்காமல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அவரை வக்கீலாக பதிவு செய்ய அனுமதித்துள்ளது.

10-ம் வகுப்பு, அதை தொடர்ந்து 12-ம் வகுப்பு, பின்னர் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டுமே அரசு பணிகளில் சேரமுடியும். இதுதொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது.

ஆனால், 12-ம் வகுப்பு படிக்காமலேயே பட்டப்படிப்பை முடித்த பூர்ணிமா, கடந்த 2010-ம் ஆண்டு நடந்த நீதிபதி பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். தற்போது, அவர் சென்னை ஐகோர்ட்டின் லஞ்ச ஒழிப்புப்பிரிவு பதிவாளராக பதவி வகிக்கிறார். எனவே, முறையான பட்டப்படிப்பை பெறாததால், நீதிபதி பூர்ணிமா பதிவாளராக பதவி வகிக்க இடைக்கால தடை விதிக்கவேண்டும். அவர் எந்த அடிப்படையில் பதிவாளர் பதவியை வகிக்கிறார் என்று விளக்கம் கேட்டு, அவரை அப்பதவியில் இருந்து நீக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. காணொலி காட்சி மூலம் நடந்த விசாரணையின்போது, நீதிபதி பூர்ணிமா 12-ம் வகுப்பு படித்ததற்கான கல்விச்சான்றிதழை தலைமை நீதிபதி காண்பித்தார். பின்னர், ஆதாரம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறிய நீதிபதிகள், மனுதாரருக்கு ரூ.5 லட்சம் வழக்குச்செலவு (அபராதம்) விதித்தனர்.

மேலும், இந்த தொகையை எதிர்மனுதாரரான நீதிபதி பூர்ணிமாவுக்கு மனுதாரர் வழங்கவேண்டும் என்றும், அவ்வாறு வழங்கவில்லை என்றால், அவரிடம் இருந்து இந்த தொகையை வசூலிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் சதீஷ்குமார் வருகிற 20-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.