“ஓ.பி.எஸ் கையை வெட்டுவேன்” : அதிமுக பிரமுகர்பகிரங்க மிரட்டல்!

182

அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் கையை வெட்டுவேன் என்று தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

அதிமுக கட்சி தற்போது சசிகலா அணி, பன்னீர் செல்வம் என்று இரண்டாக பிரிந்து செயல்பட்டுவருகிறது. சசிகலாவும், முதல்வர் ஓபிஎஸ்ஸூம் தனித்தனியே தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் அறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் கலைராஜன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், ஓபிஎஸ் அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் அவரது கையை வெட்டுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிமுக தொண்டர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த கலைராஜன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காஞ்சிபுரம் அதிமுக இளைஞரணி செயலாளர் செல்லப்பாண்டின் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.