ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான மியூசியத்தை திறந்து வைத்த மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் கைவண்ணத்தில் உருவான மியூசியத்தை திறந்து வைத்த மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
*புதுச்சேரியின் புதிய அடையாளம் – ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன் மியூசியத்தை திறந்து வைத்த மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி*
*புதுச்சேரி அரசின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் விதமாக ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்’ மியூசியம் அமைந்துள்ளது – மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு*
*புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் பார்க்க ஒரு மியூசியம் அமைந்துள்ளது – மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி*
ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் விண்டேஜ் கேமரா, கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது.
தற்போது இவரது கைவண்ணத்தில் புதுச்சேரியின் பாரம்பரியமிக்க ஒய்ட் டவுன்- இல் பிரமாண்ட கலாச்சார நிறுவனம் ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்’ என்ற மியூசியம் தைத்திருநாளை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்களால் திறக்கப்பட்டு இருக்கிறது.
வில்லா குகா, ரூ சுஃப்ரென், புதுச்சேரி – 605001 என்ற முகவரியில் உருவாகி இருக்கும் ‘ஒண்டர்ஸ் ஆஃப் ஒய்ட் டவுன்’, இந்தியாவின் அருங்காட்சியக மனிதராக அறியப்படும் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் திரு.வே.குகன் இணைந்து உருவாக்கி உள்ளனர்.
லைவ் ஆர்ட் மியூசியம், டெடி மியூசியம் மற்றும் ஃபிஷ் மியூசியம் என மூன்று பிரத்யேக அருங்காட்சியகங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கலை மற்றும் கலாச்சார மையத்தை கட்டடத்துறையில் புகழ்பெற்ற அகிலன் ஆர் வடிவமைத்துள்ளார். மெழுகு சிலை சிற்பங்கள், கொண்ட லைவ் ஆர்ட் மியூசியத்தில் உலகின் பிரபல தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல் கலாம், மதர் தெரேசா, ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட பலர் தத்ரூபமாக இருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் மிக உயரமான மனிதன் மற்றும் குள்ளமான மனிதன் பார்க்க உண்மையாகவே காட்சியளிக்கும் சிலிகான் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
டெடி (Teddy) மியூசியம் மனித குலத்தின் சர்வதேச அழகியல், குழந்தை பருவ நினைவுகளை கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 195 நாடுகளின் பாரம்பரிய மிக்க உடைகளில் 500 டெடி பொம்மை மறு உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கிறது. ஃபிஷ் (Fish) மியூசியத்தில் நீருக்கடியில் உள்ள எண்ணற்ற உயிரினங்களை தழுவி உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மியூசியத்தை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் மற்றும் அவரது குழுவினரை வாழ்த்தினார். மேலும் அவர் கூறும்போது, மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள, தலைவர்களின் சிலிகான் சிலைகள் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இந்த மியூசியம் அமைந்து இருப்பது பாராட்டுக்குரியது. சுற்றுலா பயணிகள், மாணவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இந்த மியூசியத்தை பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது இருக்கிறது. கலையம்சம் பொருந்திய நல்ல அருங்காட்சியம் அமைந்து இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடிக்கும். சுற்றுலாவுக்கு புதுச்சேரி அரசு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு உறுதுணையாக இந்த அருங்காட்சியகம் அமைந்து இருப்பது எங்களுக்கு சிறப்பு என்று பாராட்டி கூறினார்.