விருபாக்‌ஷா தமிழ் திரைப்பட விமர்சனம்🤐

இது வரை ₹70 கோடி க்குமேல் ஆந்திராவில் வசூல் செய்து உள்ளது...

86

 

 

 

 

#விருபாக்‌ஷா   திரைப்படத்தின் விமர்சனம் தான் பார்க்க போறோம்…

பிரபல இயக்குனர் சுகுமாருடன் இணைந்து இப்படத்தை கார்த்திக் வர்மா தண்டு எழுதி இயக்கியுள்ளார்.

இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர் 

 

இதில் சாய் தரம் தேஜ் , சம்யுக்தா மேனன் , சுனில் , ராஜீவ் கனகலா , பிரம்மாஜி மற்றும் ரவி கிருஷ்ணா ஆகியோர் நடிச்சிருக்காங்க, ஒளிப்பதிவு ஷாம்தத் சைனுதீன…

இப்படத்தின பட்ஜெட் ₹25 கோடி…

இது வரை ₹70 கோடி க்குமேல்

ஆந்திராவில் வசூல் செய்து உள்ளது

 

தயாரிப்பு வடிவமைப்பு, எடிட்டிங் முன்னணி நடிகர்களின் நடிப்பும் குறிப்பாக சம்யுக்தா மேனனின் நடிப்பும் பாராட்டத்தக்கது…

 

படத்தின் ஒலி வடிவமைப்பு மற்றும் ஒளிப்பதிவைப் பாராட்டியே ஆகவேண்டும்… சாய் தரம் தேஜ் ஒரு நல்ல மறுபிரவேசத்துடன் வந்து உள்ளார்…

ஒரு “நல்ல பொழுதுபோக்கு படமாக வந்துள்ளது படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை நெட்ஃபிக்ஸ் மற்றும் ஸ்டார் மா நிறுவனம் பெற்றுள்ளது . 

தமிழ் நாடு உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கி வெளியிடுகிறது…

 

இந்த படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்…..

 

1979 ஆம் ஆண்டு, ருத்ரவனம் கிராமத்தில், வெங்கடாசலபதி தனது வீட்டில் ஒரு பூஜை நடத்துகிறார் அது என்ன???  சூனியம் செய்வதாக நினைத்து கிராம மக்கள் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது மனைவியையும் எரித்து, விடுகிறார்கள் அவர்கள் குழந்தைகள் என்ன ஆனார்கள…

அன்றிலிருந்து பன்னிரண்டாம் ஆண்டில் கிராமம் அழிந்துவிடும் என்று சலபதியின் மனைவி ஒட்டுமொத்த கிராமத்தையும் சபிக்கிறாள்.

அதன் படி கிராமத்தை ஆபத்து சூழ்ந்துதாஅந்த ஆபத்தை விளைவிப்பவர் யார்…

அவர்களின் மகன் பைரவா, கிராம மக்களால் ஒரு அனாதை இல்லத்தில் சேர்க்கப்படுகிறார், அவர் பழிவாங்குவதையும் மந்திரங்களை உச்சரிப்பதையும் தொழிலாகவாழ்கிறார்…

அவர் என்ன ஆனார் எங்கு சென்றார் கிராம மக்கள் சாவுக்கு அவர்தான் காரணமா… படத்தின் ஆரம்பத்தில் 1991 ஆம் ஆண்டில், ஒரு கிராமவாசி ஒரு காகத்தால் தாக்கப்பட்டு, மயக்க நிலையில் காட்டுக்குள் நடக்கத் தொடங்கும் திகிலோடு படம் ஆரம்பமாகிறது… அந்த காகம் யாரால் ஏவப்படுகிறது அதன் சூத்திரதாரி யார்???

12 வருடங்கள் கழித்து குடும்பத்துடன் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது கிராமத்திற்கு திரும்புகிறார் நாயகன் சூர்யா. அவன் வரும்பொழுது காரின் மீது ஒரு காகம் பட்டு இறந்து விடுகிறது…

அது சூர்யாவுக்கு அபத்தமான சகுனமா அதன் பின் என்ன நடக்கப்போகிறது காகம் தாக்கிய கிராமவாசி இறந்த பிறகு கிராமம் கோயில் பூட்டப்பட்டு கிராமமே அல்லோகலப்படுகிறது அதன்பின் நடக்கும் மர்மம் என்ன… கிராம பூசாரி 8 நாட்கள் ஊரடங்கு உத்தரவை விதிக்கிறார், அங்கு யாரும் கிராமத்திலிருந்து வெளியே செல்லக்கூடாது, என்று அந்த ஊரைச் சேர்ந்த சுதா ஏன் வெளியேறினார்… அவருடைய காதலன் என்ன ஆனார் அந்த காதலன் யார் சூர்யா காதலிக்கும் நந்தினி யார் நந்தினி எந்த வித நோயால் பாதிக்கப்படுகிறார் அவரிடம் இருக்கும் மர்மம் என்ன???

 

ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தில் இருக்கும் நந்தினி சூர்யாவுக்கு சரியான நேரத்தில் உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனது பதக்கத்தை அவரிடம் கொடுக்கிறார் 

அந்தப் பதக்கம் கிளைமாக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைகிறது சூர்யாவின் உயிரை காப்பாற்றுகிறது அகோரிகளிடமிருந்து காப்பாற்றுகிறது அமானுஷ்யம் இருந்து காப்பாற்றுகிறது அப்படி என்றால் நந்தினிக்கு அந்த பதக்கம் வழங்கியது யார்???

சூர்யாவின் அக்கா மரணத்திற்கு யார் காரணம் குருசாமி ஏன் ரயில் முன் தன்னைத் தானே பலியிட்டு கொண்டார்.

உண்மையில் அந்த குருசாமி யார் அவர் ஏன் சுதாவை தன் வலைக்குள் கொண்டு வந்தார்…

குமார், . சுதாவுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ரயிலில் குமார் கொல்லப்பட்டார்.ஏன் இதைப் பார்த்த சுதா, அதிர்ச்சியடைந்து, தேனீக் கூட்டிற்குள் நுழைந்து, தேனீக்களால் குத்தி மரணமடைகிறாள்.இது ஏன் மேலும் பலர் சங்கிலி எதிர்வினையில் இறக்கத் தொடங்குகிறார்கள்.

இது சாபமா பாவமா அமானுஷ்ய சக்தியா இருந்து போன அந்த பைரவாவின் குடும்பத்தில் விட்ட சாபமா என்று சூர்யா சாபத்தை விசாரிக்கத் தொடங்குகிறார், 

அப்படி விசாரிக்க தொடங்கும் பொழுது பல உண்மைகள் தெரிய வருகிறது படத்தின் பல முடிச்சுகள் அவிழ்கிறது ஒவ்வொன்றாக அவிழ அவிழ நமக்கும் ஷாக் அடிக்க வைக்கிறது படம்…

வெங்கடாசலபதி மற்றும் அவரது மனைவியைப் பற்றி தெரிந்து கொளளும் போது அதிர்ச்சி கிளைமாக்ஸ் காட்சி தன் காதலி நந்தினியா அல்லது ஊர் மக்களா நாயகன் என்ன முடிவு எடுக்கிறான் என்பது படத்தின் ஹைலைட் !!!

பைரவா இன்னும் உயிருடன் இருப்பதையும், பழிவாங்குவதையும் சூர்யா கண்டுபிடிக்கிறார்….

அந்த காட்சிகள் செம விறுவிறுப்பு…

சூர்யா, இன்னும் 8 மணி நேரத்தில் ஒரு வழியாய் நந்தினியைக் காப்பாற்றுவதாகக் கூறிபுறப்படுகிறார்…

 அதனால் அவர் ஒரு தீர்வைத் தேடி கிராமத்தை விட்டு வெளியேறுகிறார். 

அப்போது வேறு ஒரு ஊரைச் சேர்ந்த மக்கள் அவரை கொல்ல துரத்துகிறார்கள் எந்த காட்சிகள் செம பரபரப்பு…

இப்படி படம் முழுவதும் கேள்விக்கணைகளால் நம்மை திகைக்கு விட்டு ஆச்சரியமான பாதைக்கு அழைத்து செல்கிறது திரைக்கதை…

நந்தினியின் இறுதிச் சடங்குகளைச் செய்யும்போது, தீய பழக்கவழக்கங்கள் குறித்த தடையை விட்டுவிடுமாறு சூர்யா கிராமவாசிகளிடம் கேட்டுக்கொள்கிறார். அவர் கையில் நந்தினியின் பதக்கம் முக்கிய பங்கு வைக்கிறது படத்திற்கு படம் பார்க்கும் பொழுது ஒரு வித்தியாசமான அனுபவத்தை உணர்வீர்கள் அந்த கிராமத்திற்குள் நாமே நுழைந்து விட்டோம் என்று நமக்கு தோன்றும் அப்படி ஒரு பரபரப்பான திரைக்கதையை இயக்குனர் சுகுமார் தந்திருக்கிறார் இசை படத்துக்கு பலம் ஒளிப்பதிவு இருட்டில் மிரட்டுகிறது…

படத்துக்கு தேவையான சிஜி கலர் கரெக்ஷன் மற்றும் காட்சி அமைப்புகள் ஒரு தரமான படத்திற்கு இணையாக இருக்கிறது…

படத்தின் இயக்குனர் சொல்ல வந்ததை நன்றாக சொல்லியுள்ளார் திகில் ஊட்டும் காட்சிகள் நிறைய இருக்கிறது அதே சமயம் அடுத்து என்ன நடக்கிறது நடக்கப்போகிறது என்பதையும் திரைக்கதையில் புகுத்தி விறுவிறுப்பாக கொண்டு சென்றது பாராட்டத்தக்கது…..