தேசிய விருது பெற்ற நடிகரும், Global Iconனுமான நடிகர் தனுஷ், IMDb இன் மிகவும் பிரபலமான இந்திய நடிகர் 2022 பட்டியலில் முதலிடம் பிடித்து மீண்டும் நம்மைப் பெருமைப்படுத்தியுள்ளார். ஃபுட் டெலிவரி பையனாக இவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம், 100 C+ வசூலை அள்ளி பிளாக்பஸ்டராக அமைந்தது. இதைத் தொடர்ந்து, ரூஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கிய ‘கிரே மேன்’ என்ற திரைப்படம் வாயிலாக, முதல் முறையாக ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிவு செய்தார். இப்படத்தில் ரியான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ் ஆகியோர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ளனர். V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கிய ‘நானே வருவேன்’ திரைப்படம் இவரது சமீபத்திய வெளியீடாகும். ‘வாத்தி/ சார்’, ‘கேப்டன் மில்லர்’ மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் பெயரிடப்படாத திட்டம் ஆகியவை அவருடைய அடுத்த கட்ட திரைப்படங்கள் ஆகும்.