நடிகை லட்சுமி இறந்து விட்டதாக இன்று காலையில் இருந்தே செய்தி, வதந்தின்னு எல்லா தீயும் பரவியது. ஆளாளுக்கு போனை போட்டு லட்சுமியிடம் அம்மா நீங்க உயிரோட இருக்கீங்களா என்று கேட்க வெறுத்துப்போன லட்சுமி. நான் உயிரோடதானப்பா இருக்கிறேன். என்று ஒரு வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ‘இன்னிக்கு காலையில இருந்து எனக்கு எல்லாரும் போன் பண்ணிட்டு இருக்காங்க. இன்னிக்கு எனக்கு பிறந்த நாள் கூட இல்லியே அப்புறம் ஏன் இத்தனை பேர் கூப்பிடுறாங்னு விசாரிச்சா, ‘நடிகை லட்சுமி இறந்துட்டதாக’ ஒரு செய்தி போயிட்டிருக்காம். பொறந்தால் இறந்துதானே ஆகணும். இதுக்கெல்லாம் பயப்படப்போறதில்ல. கவலைப்படவும் போறதில்ல. ஆனா, இவ்ளோ வேலை வெட்டி இல்லாதவங்க, இதை பரப்பிட்டு இருக்காங்களேனு நினைக்கறப்ப நாம திருந்தவே மாட்டோமான்னு நினைக்கத் தோணுது.
விசாரிச்சு பார்தா இறந்தது நடிகை லட்சுமி இல்லை, புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமின்னு தெரிஞ்சது. யானைக்கும், நடிகைக்கும் வித்தியாசம் தெரியாமா இப்படி புரளிய கிளப்பறீங்களேப்பா…