சிரஞ்சீவி சிறந்த சினிமா ஆளுமையாம்: கோவாவுல விருது வழங்கி இருக்காங்க

159

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் கோவா மாநில அரசு இணைந்து நடத்துகிறது கோவா சர்வதேச திரைப்பட விழாவை.கடந்த 20-ம் தேதி இவ்விழா தொடங்கியது. இவ்விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதன் நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் ஆந்திர நடிகர் சிரஞ்சீவிக்கு 2022 ம் ஆண்டிற்கான இந்திய திரைப்பட ஆளுமை விருதை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் வழங்கி இருக்காரு.

சிரஞ்சீவி என்ன ஆளுமை செஞ்சிட்டாருன்னுதான் தெரியல. 150 படத்துல நடிச்சிருக்காரு, ஒரு தேசிய விருது வாங்கியிருக்காரா, காலத்துக்கும் நிற்குற மாதிரி ஒரு படம் பண்ணயிருக்காரா, தன்னோட ரசிகனை குஷிப்படுத்துற மாதிரி ஆக்ஷன் படத்தில் அதிரடி சண்டை போட்டு, பன்ஞ் டயலாக் பேசி, மகள் வயது நடிகைகளுடன் இணைந்து நடித்ததுதான் இவரது ஆளுமையா. நெட்டிசன்பாய்ஸ் கேட்குறதுலேயும் நியாயம் இருக்குல்ல.