பாம்பாட்டத்தை காப்பாற்றுவரா? மல்லிகா ஷெராவத்

174

வி.சி.வடிவுடைன்னு ஒரு டைரக்டர், காசி, தம்பி வெட்டோத்தி சுந்தரம்னு இரண்டு படம் ஓரளவுக்கு சரியா பண்ணினாரு, திடீர்னு அவருக்கு என்னாச்சுன்னு தெரியல கொம்பு, ஜாபர்கான் பேட்டை பேய் படங்கள் எடுத்து தயாரிப்பாளரை போண்டியாக்கினார். அடுத்து சன்னி லியோன வச்சு வீரமாதேவின்னு ஒரு படம் எடுத்து பாதியில கைவிட்டாரு பல கோடி நஷ்டம் அந்த தயாரிப்பாளருக்கு, என்னத்த சொல்றது இப்போது அதே தயாரிப்பாளர்தான் அவரை வச்சு பாம்பாட்டம் என்ற படத்தை எடுக்கிறார்.

படத்தை இந்தியாவிலுள்ள அம்புட்டு மொழியிலேயும் ரிலீசு பண்றாங்க. இந்தியில படம் ரிலீசாங்றதால பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராபத்தை முக்கிய கேரக்டர்ல நடிக்க வச்சிருக்காங்க.

தொடர்ந்து தயாரிப்பாளர்களை போண்டியாக்கி வரும் வடிவுடையானையும், தயாரிப்பாளையும் மல்லிகா ஷெராவத் காப்பத்துவாரான்னு தெரியல. படத்தோட டீசர் வெளியாகியிருக்கு. சும்மா சொல்லக்கூடாது கொஞ்சம் மிரட்டலாத்தான் இருக்கு.