காரி

96

வித்தியாசமான பெயரா இருக்கே… படமும் வித்தியாசமா இருக்குமோன்னு நம்பி போயிடாதீங்க. வழக்கமான சசிகுமார் படம், வழக்கமான கிராமத்து படம்தேன்.

புதுமுக இயக்குனர் ஹேம்ந்த், சசிகுமாருக்கும், தயாரிப்பாளர் லக்‌ஷமன் குமாருக்கும் இனிக்க இனிக்க கதை சொல்லி ஏமாற்றி படத்தை எடுத்திருக்காரு.

காரிங்றது ஜல்லிக்கட்டுக்கு போற நாட்டு காளைகள்ல முக்கியமான ஜாதி. இந்த மாதிரி நாட்டு மாட்டை வாங்கி கசாப்பு போட்டு காசு பார்க்கணுங்றது வில்லன் ஜேடி சக்ரவர்த்தியோட திட்டம். முழு மாட்டையும் ரோஸ்ட் பண்ணியெல்லாம் காட்டுறாருன்னு அவரோட ஆர்வத்தை புரிஞ்சுக்கோணும்.

ஊரு பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜல்லிகட்டு வைக்கிறாங்க. 18 காளைய அடக்க ஒரு வீரன் குறையுது. அதனால மெட்ராசுல குதிரை ஓட்டுற சசிகுமாரை தேடிப்புடிச்சு ஊருக்கு கூட்டி வராக. வந்தவரு ஜல்லிகட்டையும் நடத்தி வில்லனையும் துரத்தி அடிக்கிறதுதான் கதை.

வசதியான புரட்யூசர் கிடைச்சாருங்றதுக்காக இயக்குனர் ஹேமந்த் இஷ்டத்துக்கு கதையை நீட்டி முழக்கி படம் முழுக்க பணத்தை தண்ணியா செலவு பண்ணி வச்சிருக்காரு. இப்போது தியேட்டர் கவுண்டர் ஈயாடுது. ஏதோ சர்தார் படத்துல கொஞ்சம் சம்பாதிச்சதால தயாரிப்பாளரும் மனசை தேத்திக்கிடுதாரு.

படத்துல ரெண்டு விஷயம் உருப்படியா இருக்கு. ஜல்லிக்கட்டை இவ்வளவு தத்துருவமா எந்த படத்துலயேும் காட்டல. அதோட புதுசா கேரளாவுலேருந்து வந்திருக்கிற பார்வதி அருண்ங்ற புள்ள அருமையா நடிச்சிருக்கு. காசு ரொம்ப வச்சிருந்தீங்கன்னா போயி பாருங்க. காரி துப்புற அளவுக்கு அம்புட்டு மோசமில்ல.