‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

169

காளி வெங்கட் நடிக்கும் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வெங்கட்பிரபுவும், விஜய் சேதுபதியும் இணைந்து வெளியிட்ட ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ பட ஃபர்ஸ்ட் லுக்

சமுத்திரக்கனியின் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய படத்திற்கு ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.

அறிமுக இயக்குநர் ரா. பரமன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’. இதில் நடிகர் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் காளி வெங்கட்  மற்றும் நடிகை ரித்விகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். பாடல்களை யுகபாரதி எழுத, படத்தை கே. எல். பிரவீன் தொகுத்திருக்கிறார். கே. கே. ஆர் சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கே. ரமேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட்பிரபுவும் இணைந்து வெளியிட்டனர்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,” தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ உருவாகி இருக்கிறது.” என்றார்.

சமுத்திரக்கனி – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘ சமுத்திரக்கனியின் பப்ளிக்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை கவர்ந்திருப்பதால் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.