கின்னஸ் சாதனை நோக்கி,  மீண்டும் உயிர்த்தெழும் நாயகன் திலீபன் புகழேந்தி !

126

தமிழ் சினிமாவில் “பள்ளிக்குடம் போகமாலே, எவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நாயகன்  திலீபன் புகழேந்தி, தான் முதலில் முயற்சித்த கின்னஸ் பைக் ரேஸிங் ரெக்கார்டை, 10 வருட போராட்டத்திற்கு பிறகு,  மீண்டும் சாதிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நாயகனாக கவனம் குவித்து வருபவர் நாயகன் திலீபன் புகழேந்தி, இலக்க்கிய நாயகன் கவிஞர் புலமைபித்தனின் பேரனும் பிரபல தயாரிப்பாளர் புகழேந்தி அவர்களின் மகனுமாகிய இவர் தற்போது, சாகவரம் எனும் சைக்கோ திரில்லர் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். சிறு வயதிலேயே பைக் மீது மிகுந்த ஆர்வமும் காதலும் கொண்டிருந்த இவர் வருங்காலத்தில் பைக் ரேஸராக வர வேண்டும் என்ற கனவில் இருந்தார்.  சிறு வயது முதல் தொடர்ந்து பைக் ரேஸ் பயிற்சிகளை செய்து, ஸ்கீம் பைக் ரேஸிங்கில்   தமிழ்நாடு பைக் ரேஸிங் சாம்பியனாக ஜெயித்தார். உலகளாவிய கின்னஸ் சாதனைக்காக 10 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு வீலிங் செய்யும் சாதனை முயற்சியை 2009 ஆம் ஆண்டு கின்னஸ் நடுவர்கள் முன் முன்னெடுத்தார். அப்போது நடந்த எதிர்பாராத விபத்து, அவரது கனவை முடக்கி போட்டது மீண்டும் பைக் ஓட்டக்கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கை செய்ததால் பைக் ரேஸிலிருந்து ஒதுங்கி சினிமாவில் கவனம் செலுத்தினார். தற்போது மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு கின்னஸ் சாதனை முயற்சியை கையிலெடுத்துள்ளார். வரும் 2022 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, 13 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு, வீலிங் செய்யும் கின்னஸ் சாதனை முயற்சியை செய்யவுள்ளார்.

இது குறித்த்து திலீபன் புகழேந்தி கூறும் போது…
சிறு வயது முதலே பைக் தான் என் உயிராக இருந்துள்ளது.  எப்போதும் பைக் ரேஸில் சாதிக்க வேண்டும், பைக் ரேஸராக வர வேண்டும்  என்பது தான் என் கனவாக இருந்துள்ளது. பைக் மீதான காதலில் தமிழ்நாடு பைக் ரேஸ் சாம்பியனாகவும் ஆகிவிட்டேன், ஆனாலும் கின்னஸ் சாதனை படைப்பதற்காக 10 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு வீலிங் செய்யும் சாதனை முயற்சியை 2009 ஆம் ஆண்டு கின்னஸ் நடுவர்கள் முன்னால் செய்தேன், அப்போது எதிர்பாராமல் என் மேல் பைக் விழுந்து விபத்தாகிவிட்டது. டாக்டர்கள் திரும்பவும் பைக் ஓட்டக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்கள். என் தாத்தா மீண்டும் என்னை பைக் ஓட்டக்கூடாது என சொல்லிவிட்டார். குடும்பத்தினரின் அன்பு என்னை மாற்றியது அவர்களுக்காக சினிமாவுக்குள் நுழைந்தேன். சமீபத்தில் என் தாத்தாவின் மறைவு என்னை மனதளவில் மிகவும் பாதித்தது, என் கனவு என்னை துரத்திக்கொண்டே இருந்தது. மீண்டும் பைக் தான் என்னை மீட்டெடுத்தது. பைக்கை மீண்டும் தொட்டபோது நான் மீண்டும் உயிர்த்தெழுந்ததாகவே உணர்ந்தேன். என் வாழ்க்கையின் கனவை நிறைவேற்ற மீண்டும் ஆசைப்பட்டேம் அதற்காகவே கடுமையாக பயிற்சி செய்தேன். இப்போது 13 கீமி  பைக்  சக்கரத்தில் நெருப்பு வைத்துக்கொண்டு வீலிங் செய்து கின்னஸ் சாதனை செய்யவுள்ளேன். வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கின்னஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் சென்னை , பெங்களுர் நெடுஞ்சாலையில் இந்த சாதனை நிகழ்வு நடக்கவுள்ளது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார்.