SATHYA JYOTHI FILMS T.G. தியாகராஜன் வழங்க, மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு, அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது !

125

SATHYA JYOTHI FILMS T.G.தியாகராஜன், ஹிப்ஹாப் ஆதி கூட்டணியில் “அன்பறிவு” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில், இந்த கூட்டணீ மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த புதிய படம், மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் ARK சரவணன் இயக்கத்தில், மிகப்பெரும் பட்ஜெட்டில் பொழுதுபோக்கு, ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது. இப்படத்தினை செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் இணைந்து தயாரிக்க, SATHYA JYOTHI FILMS சார்பில் T.G. தியாகராஜன் வழங்குகிறார். இந்த புதிய திரைப்படம் ஆயுத பூஜை நன்நாளில் துவங்குகிறது. படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் சென்னை பகுதிகளில், 75 நாட்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நாயகியாக முன்னணி ஹிரோயின்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தற்போது இயக்குநர் அஷ்வின் ராம் இயகத்தில் உருவாகி வரும் “அன்பறிவு” திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் வெளியிட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி, நடிகர் நெப்போலியன், காஷ்மீரா பர்தேசி இணைந்து நடித்துள்ளனர்.