20க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திரங்கள் பாடிய TMJAவின் “எண்ணம் போல் வாழ்க்கை.”

138

என்ற தனி இசை ஆல்பத்தை யுவன் ஷங்கர் ராஜா வெளியிடுகிறார்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் எண்ணம் போல் வாழ்க்கை.. என்ற தனி இசை பாடல் ஆல்பம் தயாராகி உள்ளது.

இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய யு 1 ரெக்கார்டு நிறுவனம் மூலம் விரைவில் வெளியிட உள்ளார்.

இதற்கான ஒப்பந்தம் இரு தினங்கள் முன் கையெழுத்தானது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம் ஆகியோர் இந்த ஒப்பந்த நகலை பெற்றுக் கொண்டார்கள்.

அதோடு, தமிழ் சினிமாவிலும், பத்திரிகை வரலாற்றிலும் முதல் முறையாக பிரபல நட்சத்திரங்களான
சசிகுமார், ஆர்யா, GVபிரகாஷ், சூரி, கிருஷ்ணா, அசோக்செல்வன், மகேந்திரன், யோகிபாபு, மைக்கேல், மஹத், குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், புகழ், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யாராஜேஷ், ஷெரின், ஜனனி, சஞ்சித்ஷெட்டி, ரைசா, சாக்‌ஷி அகர்வால், அதுல்யா, அம்மு அபிராமி என 20க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இதில் பாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி ஸ்டோரி புகழ் எட்வின் லூயிஸ் இசையில், கவிதாவின் வரிகளில், பிரீத்தி குரலில், சாண்டி நடனம் அமைக்க, தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசப் எடிட் செய்துள்ளார்..

“எண்ணம் போல் வாழ்க்கை”.. என பெயரிடப்பட்ட இந்த தனி இசை ஆல்பம், கொரானா கடந்து, தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது.
இந்த தனி இசை ஆல்ப பாடல் வெளியீடு விரைவில் வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.