ஜோக்கர், அருவி போன்ற படங்கள் வந்திருக்காது ! மற்றபடி வாழ்க பாரதம் என்று சொல்வதில் பெருமிதமே…தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு

204

ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதா முன்பே வந்திருந்தால் ஜோக்கர், அருவி போன்ற திரைப்படங்கள் வந்திருக்காது என்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியுள்ளார்.

மத்திய அரசு தற்போது புதிய ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. அதற்கு கருத்து தெரிவிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் திரைத்துறையில் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட நடிகர்களும், பல இயக்குநர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவும் அந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “இந்த மசோதா நாட்டின் இறையாண்மையை காக்க என்று ஒரு கூட்டம் கம்பு சுற்றுகிறது. ஆனால் இந்த சட்ட மசோதா முன்பே இருந்திருந்தால் ஜோக்கர், அருவி போன்ற திரைப்படங்கள் வந்திருக்காது. எனவே தான் இந்த புதிய சட்டதிருந்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். இவற்றுடன், ”மற்றபடி, வாழ்க பாரதம் என்று முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் அவர்.