எவ்வளவு காலம்தான் நடந்த கல்யாணத்தை மறைக்க முடியும்! கத்திரிக்காய் முற்றி கடை தெருவிற்கு வந்தாச்சு….

193

கன்னட சினிமாவின் கலக்கல் சகோதரிகள் நிக்கி கல்ராணிவும், சஞ்சனா கல்ராணி. இவரும் சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்கள். கடந்த வருடம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். சஞ்சனா கல்ராணி.

இவருக்கும் டாக்டர் அசிஸ் பாஷா என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. அப்போதெல்லாம் தனக்குத் திருமணமாகவில்லை என்று கோபத்தில் கொந்தளித்து பேசி வந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு திருமணம் நடந்தது பற்றி பேசியுள்ளார் சஞ்சனா. அவருக்கும் அசிஸ் பாஷாவுக்கும் சிறு வயதிலிருந்தே பழக்கம் இருந்ததாம். கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொண்டதாகவும், அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.