படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம் சமுத்திரக்கனி நெகிழ்ச்சி

218

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்து வருகிறார். இன்று சமுத்திரக்கனியின் பிறந்தநாளை அந்தகன் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள். இப்படியொரு நெகிழ்ச்சியான பிறந்தநாளை கொண்டாடியதில்லை என்கிறார் சமுத்திரக்கனி.