மாலத்தீவிற்குள் நுழையாதீர்கள்! இந்திய சினிமா நட்சத்திரங்கள் அதிர்ச்சி!

223

சமீபகாலமாக சினிமா நட்சத்திரங்கள் கும்பல் கும்பலாக மாலத்தீவிற்கு படையெடுத்து வந்தார்கள். இந்த மாலத்தீவு பயணத்தை சுபமாக தொடங்கி வைத்தவர்கள் காஜல் அகர்வாலும் அவரது கணவர் கவுதம் கிச்சலுவும்தான். யாரை வெறுப்பேற்றுவதற்காக என்று தெரியவில்லை விதவிதமான ஹனி மூன் போட்டோக்களை போட்டு அமர்க்களப்படுத்தியிருந்தார்கள். அவரை தொடர்ந்து டாப்சி அவருடைய காதலருடன் சென்றார். சமந்தா, நாகசைதன்யா ஜோடி மற்றும் நடிகைகள் வேதிகா, ரகுல் ப்ரீத் சிங், ஹன்சிகா, பிக் பாஸ் புகழ் ரைசா வில்சன், ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா ராஜேஷ், விஷ்ணு விஷால், பிக்பாஸ் ஷிவானி.

பாலிவுட் காதல் ஜோடிகள் ஆலியா பட் – ரன்வீர் சிங், திஷதா பதானி, டைகர் ஷெராப் என பலரும் சென்றனர். தற்போது இந்தியாவிலிருந்து சுற்றுலா பயணிகள் வர மாலத் தீவு சுற்றுலாத் துறை தடை விதித்துவிட்டது. நாளை முதல்இந்த தடை உத்தரவு வருகிறது. மாலத்தீவு செல்லாமல் ஏங்கும் சினிமா ஜோடிகளுக்கு இந்த தடை உத்தரவு அதிர்ச்சியை தந்துள்ளதாம்.