காதல் ஓட்டு போட வா’ பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

37

தஷி ரெங்கராஜின் இசையில், கவிஞர் மு.வீரமுத்துவின் வரிகளில்,

“காதல் ஓட்டு போட வா”!

 

சத்யா மூவிஸ், சத்யஜோதி பிலிம்ஸின் பல படங்களுக்கும், தொலைக்காட்சி மெகா தொடர்களுக்கும் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கவிஞர் மு.வீரமுத்துவின் அறிவியல் காதல் வரிகளில், பாடகர்கள் ரம்யா தரணீதர், வசந்தகுமார், ராம் ஸ்ரீதர் இவர்களின் குரல்களில் தமிழ், கன்னடம், மலையாள

திரைப்படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் தஷி ரெங்கராஜின் இசையில்

காதல் ஓட்டு போட வா’ பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது!

 

இப் பாடலை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வெளியிட்டார். விழாவில் படத் தயாரிப்பாளர் எஸ்.சௌந்தரப் பாண்டியன், உலக சிலம்பொலி தமிழ்த் தரணி மன்றத்தலைவர், சங்கத் தமிழ்க் கவிஞர் கானவன், ரெப்கோ வங்கி இயக்குநர் இ.சந்தானம், ‘அருட்செல்வர்’ கூ.குருமூர்த்தி, டாக்டர் சிந்தைவாசன், காமெடி நடிகர் சாந்தகுமார், இயக்குநர் கஜேந்திரன், இந்திய திரைப்படத் திறனாய்வு சங்கத் தலைவர் அந்தோணி இராமச்சந்திரன், டாக்டர் எம்.ஜெயக்குமார், கவிஞர். மறத்தமிழன், கவிஞர். மா.தே.கலைச் செல்வன், நடிகர் பாஸ்கரன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்…….,.,