கழுவேத்தி மூர்க்கன் திரைவிமர்சனம்…
அருள் நிதி அறிமுககாட்சி…
நண்பனை அடித்ததற்காக எதிரிகளைv அடித்து நொறுக்கும் பொழுது அடடா என கைதட்டல்
நாயகி அறிமுக காட்சி…
சூப்பர் காதல் மலர்ந்தது என்று சொல்லி கல்லால் அடித்து கண்ணால் அடித்து நொறுக்கும் பொழுது சூப்பர்
கீழத்தெரு மேலத்தெரு என்று இல்லாமல் பழகும் அருள் நிதி. சந்தோஷ் கதாபாத்திரம் அருமை…
துஷாரா குறும்பு பெண்ணாக மனதில் இடம் பிடிக்கிறார்…
நன்பணாக வரும் சந்தோஷ் நடிப்பும் கதாபாத்திரம் அருமை..
இசை ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது…
எடுத்த கொண்ட கதை களம் இலக்கை நோக்கி சீராக பயணிக்கிறது…
கழுவேத்தி மூர்க்கன் படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் என்று எல்லா உணர்வுகளிலும் அருள்நிதி சிறப்பாக நடித்துள்ளார், இயக்குனர் கௌதம் ராஜ் துணிச்சலுடன் அவருடைய பாணியில் கிளைமேக்ஸ் காட்சிகளை கையாண்டு உள்ளார்…
இரண்டு நண்பர்கள் சாதியால் வேறுபட்டாலும் பள்ளி நாட்களில் நட்பாக இருக்கும் இரண்டுபேர் அதில் ஒருவர் மூர்க்கன்(அருள்நிதி), மற்றொருவர் பூமி(சந்தோஷ் பிரதாப்). வளர்ந்த பிறகு ஒவ்வொரு சூழலிலும் நண்பன் பூமிக்கு ஆதரவாக இருக்கிறார் மூர்க்கன்.அந்த நண்பர் களை பிரிவு ஏற்படுத்தும் அரசியல் வாதிகள் முடிவில் யாருக்கு வெற்றி என்பது கதை…
யாரையும் குறை சொல்லாமல், அனைத்திலும் நன்மையும், தீமையும் உண்டு என்பதை காட்டியிருப்பது தான் இந்த படம் தனித்து தெரிய காரணம்.
மேலும் படத்தில் காட்டப்பட்டிருக்கும் பிரச்சனைகளை நம்மால் உணர முடிகிறது. மூர்க்கன் என்ன செய்யப் போகிறார் என்பதை எளிதில் கணிக்க முடிந்தாலும் இரண்டாம் பாதி நம்மை ஏமாற்றவில்லை. கிளைமாக்ஸ் காட்சியும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
திரைக்கதை மற்றும் வசனம் எழுதப்பட்டிருக்கும் விதம் மூலம் இயக்குநரின் நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
படத்தின் துவக்கத்தில் நம் கலாச்சாரத்தில் பல காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு வகையான தண்டனை குறித்து தெரிய வருகிறது. ஆனால் படம் நகர நகர அதற்கான முக்கியத்துவம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
கோபக்கார வாலிபனாக அருமையாக நடித்திருக்கிறார் அருள்நிதி. கதாபாத்திரத்தை புரிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை பற்றி பேசும் சந்தோஷ் பிரதாப்பின் நடிப்பு சிறப்பு.
சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை அடுத்து இந்த படத்திலும் அருமையாக நடித்திருக்கிறார் துஷாரா விஜயன். அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். சாயா தேவி, முனிஷ்காந்த், சுப்ரமணியன் ஆகியோரின் நடிப்பையும் பாராட்டியே ஆக வேண்டும்.
டி. இமானின் இசை படத்திற்கு பெரிய பலம். முதல் பாதியில் ஒரு பாடலை குறைத்திருக்கலாம். அது படத்தின் ஓட்டத்தை பாதித்துவிட்டது.
கழுவேத்தி மூர்க்கன்- நம்பி பார்க்கலாம்.