மக்களே நாம இப்ப பார்க்க போறது “தெய்வம் மச்சான்” படத்தின் விமர்சனம்…
இயக்குனர் மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில்பார்க்க நடிகர்கள் விமல், நேகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தெய்வ மச்சான்.
இந்தபடத்தில் அனிதா சம்பத், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், தீபா, வேல ராமமூர்த்தி என பலர் நடிச்சிருக்காஙக…
படத்தின் கதை என்ன வாங்க பார்க்கலாம்…
பல்வேறு வரன்கள் பார்த்தும் தனது தங்கைக்கு திருமணம் தடைபட்டுப் போவதால் துவண்டு போயிருக்கும் அண்ணன் விமல் இறுதியாக ஒரு மாப்பிள்ளையை கண்டுபிடிக்கிறார்…
இதற்கிடையில் ஜமீன் நரேன் பகையை சம்பாதிக்கிறார் விமல்…
விமலின் கனவில் வரும் சாட்டைக்காரன் அவரின் தங்கைக்கு திருமணமானால் மாப்பிள்ளை இறந்துவிடுவார் என சொல்ல அதிர்ந்து போகிறார் தபால் கார்த்தியாக வரும் நடிகர் விமல்….
தபால் கார்த்தி என்று சொல்வதற்கு ஒரு குட்டி கதை அது நன்றாகத் தான் இருக்கிறது… இந்த சூழ்நிலையில் தங்கை அனிதாவிற்கு திருமணம் நடந்ததா இல்லையா? சாட்டைக்காரனின் சொல் பலித்ததா என்பதே தெய்வ மச்சான் திரைப்படத்தின் கதை…
விலங்கு இணையத் தொடருக்குப் பிறகு நடிகர் விமலைக் காப்பாற்றியிருக்கும் திரைப்படமாக வந்திருக்கிறது தெய்வ மச்சான்.முன்பைப் போல் இல்லாமல் நடிப்பில் மெனக்கெட்டிருக்கிறார் விமல். தங்கைக்கு வரன் பார்க்கும் அண்ணனாகத் தொடங்கி கனவில் வரும் சாட்டைக்காரன் சொல் பலிப்பதை எண்ணி தடுமாறும் வரை நன்றாக நடித்திருக்கிறார்…
முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக வந்திருக்கும் தெய்வ மச்சான் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது…
குறிப்பாக சொன்னால் கலகலப்பு விமலின் தங்கை குங்குமத்தேனாக வந்திருக்கிறார் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத். ஆங்காங்கே சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிதா சம்பத்துக்கு இந்தப் படம் முழுநீள, முக்கியமான கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதற்கேற்றார்போல் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிதா சம்பத்….
வழக்கமான அண்ணன் தங்கை பாசமலர் வசனங்கள் இல்லாமல் இயல்பாக உருவாக்கப்பட்டிருப்பதால் ரசிக்கும்படியாக இருக்கிறது…. படத்துக்கு அதுதான் பிளஸ்
“அண்ணனாவது நொண்ணனாவது” என அனிதா சொல்லும் வசனம் திரையரங்கில் சிரிப்பை தருகிறார்….
விமலின் பங்காளியாக வரும் நடிகர் பாலா சரவணனுக்கு நல்ல தீனி கொடுத்த திரைப்படம் இது. பல இடங்களில் விமலுடன் சேர்ந்து சிக்ஸ் அடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், தீபா என பெரிய பட்டாளம் இத்திரைப்படத்தில் நடிச்சிருக்காங்க…
ஆடுகளம் நரேனின் குடும்பம் ஜமீன் குடும்பம் ஆணால் அவர்கள் கேட்கும் வரதட்சணை அதை கேட்டு அலறும் விமல் நகைச்சுவைகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன….
முதல்பாதியை ஒப்பிடும்போது இரண்டாம் பாதியில் மச்சானை காப்பாற்ற விமல் எடுக்கும் சில முடிவுகள் அபத்தமாக இருக்கிறது…..
பஸ்சை மெதுவாக சொல்வது பாத்ரூமில் வழுக்கி விழுந்து விடுவார்என்று அவரேகழுவுவது இப்படி திண்டுக்கல்லை ஊர்த்தன்மையுடன் காட்டுவதில் கேமராவின் கண்கள் நன்றாக செயல்பட்டிருக்கிறது…
பாடல்கள் பெரிதாக சொல்லும்படியாக இல்லை. வசனங்கள்தான் படத்தைத் தாங்கியுள்ளன எனலாம்…
அதேசமயம் சில இரட்டை அர்த்த வசனங்கள் படத்திற்கு கல கலப்பு…
கல்யாண மண்டபம் காட்சிகள் இத்தகைய காட்சிகளைப் படமாக்குவதில் கூடுதல் கவனமும், அக்கறையும் தெரிகிறது…
பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கும்படியாக வந்திருக்கிறான் தெய்வ மச்சான்….