மதுரையும் சிவாஜி கோட்டைதானப்பு: கெத்து காட்டிய ரசிகர்கள்

155

எம்.ஜி.ஆர் நடித்த சிரித்து வாழ வேண்டும் படத்தை சென்னையில் திரையிட்டு கொண்டாடினார்கள். எம்.ஜி.ஆருக்கு அதிக ரசிகர்களை கொண்ட மதுரையில் சிவாஜி நடித்த பட்டிக்காடா பட்டணமா படத்தை போட்டு கெத்து காட்டியிருக்காங்க மதுரை சிவாஜி ரசிகர்கள்.

இந்த பங்ஷன்ல சிவாஜி மகன் ராம்குமார், மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பசும்பொன் சண்முகையா, நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான சிவாஜியின் ரசிகர்களும் விழாவில் பங்கேற்றனர். படம் தொடங்குவதற்கு முன்பாக பட்டாசு வெடித்து மேள தாளங்கள் முழங்க நடனமாடி ரசிகர்கள் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். புதிய திரைப்படத்திற்கு வருவது போன்று,
இத்திரைப்படத்தை காண சிவாஜி ரசிகர்கள் குடும்பத்தினருடன் வந்தனர். முதியவர், சிறுவர்கள் என ஆயிரக்கணக்கான ரசிகர்களால் அரங்கம் நிரம்பி இருந்தது. சிலர் டிக்கெட் கிடைக்காமலும் திரும்பினர்.

மதுரை சோழ வந்தானில் படமாக்கப்பட்ட இப்படத்தின் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு அந்த படம் வெளியீட்டு விழா, பொன்விழா நிகழ்ச்சி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது.

ஜெமினி கணேசன் ரசிகருங்க, ஜெய்சங்கர் ரசிகருங்கல்லாம் இருக்கிங்கீங்களா…