ரிப ரிப ” உலக இசை உலகில் தனித்துவம் படைக்கும் தமிழக இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ்.

73

இசையமைப்பாளர் ஜான் A அலெக்ஸிஸ் தனியிசைக்கலைஞராகவும், திரையிசைக்கலைஞராகவும் விளங்கிவருகிறார்.

தற்போது இவரின் இசையமைப்பில் “ரிப ரிப” எனும் புதிய தனியிசைபாடல் வெளியாகியிருக்கிறது.
“ரிப ரிப ” பாடலை எழுதி , இசையமைத்து பாடியுள்ளார் ஜான் A அலெக்ஸிஸ்

மதுரையைச்சார்ந்த ஜான் A அலெக்ஸிஸ் தமிழ் மொழியின் மீது பற்று கொண்டவராக ,
ஆங்கில சொற்களோடு தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தி அதை உலக அரங்கில் கொண்டுசேர்க்கவும்
உலக அரங்கில் தமிழ் மொழிக்கும், தமிழிசைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பாடல்கள் இயற்றுவதும் எனது நோக்கம் என்கிறார்.

தமிழ் திரைப்படங்களுக்கும் இசையமைத்து வரும் அதே வேளையில்
இவர் இசையமைத்த “ரிப ரிப ” பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.