தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

125

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் வினய், சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர், ஜெயா மருத்துவமனை டாக்டர் கீதா, கண் பரிசோதகர் சையது மற்றும் பிஆர்ஓ யூனியன் சங்க தலைவர் டைமண்ட் பாபு கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களை ஆபிரகாம் (கோடங்கி) வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவி கவிதா பேசும் போது, “நிறைய நடிகர்களை நாம் தினம் சந்திக்கிறோம். ஆனால் சிலர் பத்திரிகையாளர்களுக்கும் நிருபர்களுக்கும் ஒரு நல்ல புரிதலோடு உறவுகளோடு பழகுவார்கள்.

அவர்களில் ஒருவர் தான் வினய் ”உன்னாலே உன்னாலே” படத்திலிருந்து எப்படி அவரை சந்தித்தேனோ அன்று முதல் இப்போது வெளியாக உள்ள டாக்டர் படம் வரைக்கும் அவருடைய இயல்பும் குணமும் மாறவில்லை.

இரண்டு தடவை வெவ்வேறு படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் வினயை சந்தித்த போதும், அதிகமுறை சண்டை போட்டிருக்கிறேன்.

அதற்கு காரணம், அப்போது நிறைய புகைப் பிடித்து அவருடைய பற்கள் எல்லாம் கெட்டுப் போயிருந்தது .

அதை நேரடியாக ஒரு பேட்டி எடுக்கும் போது தெரிவித்தேன் .

அடுத்த படம் சூட்டிங் ஸ்பாட்டில் அவரை சந்திக்கும் போது என்னிடம் மாற்றம் தெரிகிறதா நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றார் .

இது எனக்கு ஒரு பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியது ஒரு பத்திரிக்கையாளர் சொன்னதற்காக ஒரு நடிகர் தன்னை மாற்றிக் கொண்டார் என்பதற்கு நான் பெரிய சந்தோஷப்படுகிறேன்.

இன்று வினய்யை பார்க்கும்போது அவருடைய வளர்ச்சி பெருமைப்பட வைக்கிறது .

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது . வாழ்த்துக்கள் வினய் என்று பேசி முடித்தார் சங்கத்தின் தலைவி கவிதா.

சிகரம் குரூப் நிறுவனர் சந்திரசேகர் பேசும்போது …சங்கம் நடத்துவது எத்தனை கஷ்டமான விஷயம் என்பது எனக்கு தெரியும் நானும் ஒரு சங்கத்திலும் செயற்குழுவில் உறுப்பினராக இருக்கிறேன் என்றார்.

அத்தனை பேருடைய ஒத்துழைப்பு இருந்தால் தான் சங்கம் நடக்க முடியும் என்று சொன்னார்.

டாக்டர் கீதா பேசும் போது… நாங்கள் கொரோனா வரும் முன் நிறைய மருத்துவ முகாம்கள் நடத்தி இருந்தோம் .

தற்பொழுது இந்த தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு முகாம் அமைத்துள்ளோம்.

இவர்களோடு இணைந்து செயல்படுவது இங்கு பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது தொடர்ந்து எந்த உதவி ஆனாலும் நாங்கள் இவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.

வினய் பேசும்போது 15 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இருக்கிறேன் எனக்கு தயாரிப்பாளரின் கஷ்டம் நஷ்டம் என்னவென்று எனக்குத் தெரியும் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் நான் முதலில் ஒரு நடிகன். வில்லனாக ஹீரோவாக காமெடியனாக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நான் நடிப்பேன் என்று சொன்னார் . டாக்டர் படம் தனக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்தது மிகப்பெரிய சந்தோஷம் என்றார்.

எதுவாக இருந்தாலும் நடிப்பு தான் முக்கியம். என்றார்..

அடுத்தபடியாக பாண்டியராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தின் என்னுடைய ஷூட்டிங் போர்ஷன் முடித்து கொடுத்து விட்டடேன்.மிகவும் ஆர்வமாக காத்திருப்பதாக கூறி அன்புடன் விடை பெற்றார்.

பத்திரிக்கை துறையில் நேரம் காலம் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் பல சினிமா பத்திரிகையாளர்கள் தங்களது கண்களை பற்றி கவலைப்படாமல் அயராது உழைத்து வருகின்றனர் ஒரு பத்திரிகையாளர்களுக்கு பேனா எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு இப்பொழுதெல்லாம் செல்போன் கம்ப்யூட்டர் கீ போர்டு முக்கியமாகி விட்டது ஆகையால் வெகு நேரம் செல்போன்களையும் கம்ப்யூட்டர்களையும் பார்த்துவரும் பத்திரிக்கையாளர்கள் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த சிறப்பு முகாம் நடத்தி பத்திரிகையாளர்கள் அனைவரும் சந்தோஷம் படும்படியாக இனிதே நடைபெற்றது இந்த மருத்துவ முகாம்