இன்னொரு கலை வாரிசு ஹீரோவானார்

134

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமனின் மகன் சஞ்சய், டேய் தகப்பா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்குகிறார். குறும்படங்களை இயக்கிய கவுசிக் ஶ்ரீபுஹர் இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமாகிறார். படத்தின் நாயகியாக ஆராத்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மதுரை முத்து, விஜய் டிவி புகழ் பப்பூ, ஹர்ஷ்த் கான் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜான் ராபின்ஸ் இசை. ஜோ ஜோ இந்தியன் பிலிம் கார்பரேஷன் சார்பாக சி.விவிக்ரம் சுர்யவர்மா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது.