டிக் டாக் ஜி.பி. முத்து மீது போலீசில் புகார்!

110

டிக் டாக் மூலம் ஆரம்பத்தில் வீடியோக்களை விளையாட்டாக பதிவிட்டு வந்தவர் ஜி,பி.முத்து. சகட்டு மேனிக்கு பலரை செத்த பயலே, பேதில போறவனே, மூணு கால் டவுசர் போட்டவனே என தரம் குறைவாக பேசி வீடியோக்களாக வெளியிட்டு வந்துள்ளார். குறுகிய காலத்தில் பிரபலமானார் ஜி.பி.முத்து. இதனால் அவர் போடும் வீடியோக்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை எகிறியது. பிறகு டிக் டாக் தடை செய்யப்பட்டது. ஆனாலும் ஏதாவது ஒரு தரக்க்குறைவான வீடியோக்களை பேசி பதிவிட்டு வருவதே ஜி.பி. முத்துவின் வேலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஜிபி. முத்து மீது காவல் நிலையத்தில் ஒரு புகார் வந்துள்ளது.

கலாச்சாரத்தை சீரழிப்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் காவல்துறைக்கும் இணையதளம் மூலம் புகார் வந்திருக்கிறது.