யார் பார்த்த வேலை இது..அது நான் இல்லீங்க புலம்பி தள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ்

223

காக்கா முட்டை படம்தான் ஐஸ்வர்யா ராஜேஷை அடையாளப்படுத்தியது. அதற்கு முன்பு அவர்களும் இவர்களும், அதுகளும் இதுகளும் மாதிரியான டைட்டில் கொண்ட உப்மா படங்களில் நடித்து கொண்டிருந்தார்.

சரி மேட்டருக்கு வருவோம் இப்படியா காக்கா முட்டை நல்ல பேரும் புகழும் கொடுத்தாலும் அடுத்தடுத்து ஐசுக்கு வந்த வேஷங்கள் என்ன தெரியுமா?
ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மாவா நடிக்கணும் நாலு குழந்தைகளுக்கு சித்தியா நடிக்கணும் என்பது.

உடனடியாக சுதாகரித்து கொண்டவர் முண்ணனி ஹீரோக்களுக்கு குட் மார்னிங் அனுப்ப ஆரம்பித்தார். அதன் பலன் கை மேல் கிடைத்தது.

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் தங்கையாக நடித்தார். அப்புறமென்ன தங்கச்சி வேஷமா இயக்குனர்கள் ஐஸ் வீட்டு கதவை தட்ட…அலறிப் போனார். அடுத்த நயன்தாரா அனுஷ்கா ஆசையில் இப்படி குழாங்கல்லை கொட்றீங்களே என்று குமுறிக் கொண்டிருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

எப்படியாவது தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்ற கனவில் இருந்தவரை ஷாக்காக்கும் விதமாக தற்போது அல்லு அர்ஜுன் தங்கையாக புஷ்பா படத்தில் நடிக்கப் போகிறார் என செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

இதைக் கேள்விப்பட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தான் போகுமிடமெல்லாம் புஷ்பா படத்தில் நான் நடிக்கவில்லை என மேடை போட்டு கூப்பாடு போடுகிறாராம்.